இக்கால இலக்கியம்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
காலங்கள்தோறும் இலக்கியங்கள் தோன்றுகின்றன. முற்காலத்தில் பல புலவர்களும், கவிஞர்களும் தோன்றி இறவா இலக்கியங்கள் படைத்தனர். அதைப் போல இக்காலத்திலும் சிறந்த புலவர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் இருக்கின்றனர். இவர்கள் படைத்த படைப்புகளை இக்கால இலக்கியம் என்கிறோம். இது பாரதியார் காலம் முதல் தொடங்குகிறது என்று கூறலாம்..