நாட்டுப்புறப் பாடல்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்படுத்துவது யாது?
நாட்டுப்புறங்களில் வாழ்ந்த பாமர மக்களின் எண்ணங்களை நாட்டுப்புறப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
2. நாட்டுப்புறப் பாடல்களை எவ்வாறு அழைக்கலாம்?
நாட்டுப்புறப் பாடல்களை ‘ஏட்டில் எழுதாக் கவிதைகள்’ என்று அழைக்கலாம்.
3. மனிதன் கேட்ட முதல் பாடல் எது?
மனிதன் கேட்ட முதல் பாடல் ‘தாலாட்டு’ ஆகும்.
4. நாட்டுப்புறப் பாடல் முதலில் யாரால் பாடப்பெற்றது?
நாட்டுப்புறப் பாடல் முதலில் யாரால் பாடப்பட்டதென்று கூற இயலாது.
5. யார் வடித்த கண்ணீர்ஆற்றில் யானை குளித்தது?
தம்பி அழுத கண்ணீர்ஆற்றில் யானை குளித்தது
6. நாட்டுப்புறப் பாடலின் இசை வடிவம் எவ்வாறு ஏற்பட்டது?
மனித வாழ்வின் இன்ப துன்பங்கள் நாட்டுப்புறப் பாடல்களாக இசை வடிவம் பெற்றன.
7. தம்பி அழுதக் கண்ணீர் எவ்வாறு பெருகியது?
தம்பி அழுதக் கண்ணீர் பாய்ந்தோடி ஆறாகப் பெருகியது.
8. தம்பி அழுதக் கண்ணீரில் குளித்தது யார்?
தம்பி அழுதக் கண்ணீர் ஆறாகப் பெருகியதால் அதில் யானை குளித்தது.
9. தம்பி அழுதக் கண்ணீர் ஆறு எவ்வாறு பாய்ந்தோடியது?
கண்ணீர் ஆறு இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை, மருக்கொழுந்து ஆகிய பயிர்களுக்குப் பாய்ந்து வேரோடியது.
10. தம்பி அழுதக் கண்ணீர் வற்றியது எப்போது?
தம்பி அழுதக் கண்ணீர் தாழைக்குப் பாயும்போது தழும்பி, வாழைக்குப் பாயும்போது வற்றியது.