5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  நாட்டுப்புறப் பாடல்கள் ---------- இல்லாத பாமர மக்களால் பாடப் பெற்றவையாகும்.

நாட்டுப்புறப் பாடல்கள் படிப்பறிவு இல்லாத பாமர மக்களால் பாடப் பெற்றவையாகும்.

2.  நாட்டுப்புறப் பாடல் ----------- எழுதப்பெறுவதில்லை.

நாட்டுப்புறப் பாடல் ஏட்டில் எழுதப்பெறுவதில்லை.

3.  மனித வாழ்வின் ----------- பாடல்களாக இசை வடிவம் பெற்றன.

மனித வாழ்வின் இன்ப துன்பங்கள் பாடல்களாக இசை வடிவம் பெற்றன.

4.  தம்பி அழுததால் கண்ணீர் ------------------- ஓடியது

தம்பி அழுததால் கண்ணீர் ஆறாக ஓடியது.

5.  நாட்டுப்புறப் பாடல்களை ----------- என்று கூறலாம்.

நாட்டுப்புறப் பாடல்களை ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்று கூறலாம்.

6.  நாட்டுப்புறப் பாடல்களை ----------- வழியாகக் கேட்டுக்கேட்டுப் பாடினர்.

நாட்டுப்புறப் பாடல்களை செவி வழியாகக் கேட்டுக்கேட்டுப் பாடினர்.

7.  குழந்தைகளை உறங்க வைத்துத் தாய் பாடுவது ---------- ஆகும்.

குழந்தைகளை உறங்க வைத்துத் தாய் பாடுவது தாலாட்டு ஆகும்

8.  தம்பி அழுத கண்ணீர் ---------- ஆகப் பெருகுகிறது.

தம்பி அழுத கண்ணீர் ஆறு ஆகப் பெருகுகிறது.

9.  குழந்தை அழுதக் கண்ணீர் ஆற்றில் ------------ குளித்தது.

குழந்தை அழுதக் கண்ணீர் ஆற்றில் யானை குளித்தது.

10.  கண்ணீர் வெள்ளம் ---------- பாய்கையில் வற்றியது.

கண்ணீர் வெள்ளம் வாழைத் தோட்டத்தில் பாய்கையில் வற்றியது.