மேன்மை
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

சாலை இளந்திரையன்
சாலை இளந்திரையன் நெல்லை மாவட்டம் சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் ஊரினர். இவரது பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி. இவர் காலம் 6.9.1930 முதல் 4.10.1998 வரை. தில்லிப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். கருத்துக்குப் பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்டவர்.
தம் துணைவியார் சாலினி இளந்திரையனோடு இணைந்து அறிவியக்கப் பேரவை மூலம் சமுதாய மேம்பாட்டுக்காகப் பணியாற்றியவர். எழுச்சிச் சான்றோர், திருப்புமுனைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர். இவர் பூத்தது மானுடம், வீறுகள் ஆயிரம், தாய் எழில் தமிழ், நெஞ்சொடு நெஞ்சம், உரைவீச்சு, தமிழனின் ஒரே கவிஞர், விட்டகுறை தொட்டகுறை, செயல் மணக்கும் தோள்கள் ஆகிய பல நூல்களை இயற்றியுள்ளார்..