மரணத்துள் வாழ்வோம்
பயிற்சி - 3
Exercise 3
1. மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது எது?
அ) அரசியல்
ஆ) சமுதாயம்
இ) பொருளாதாரம்
ஈ) நீதித்துறை
அ) அரசியல்
2. மக்கள் அகதிகளாகப் புலம்பெயரக் காரணம் யாது?
அ) வறுமை
ஆ) செல்வம் சேர்த்தல்
இ) உள்நாட்டுச்சூழல்
ஈ) வெளிநாட்டுக் கவர்ச்சி
இ) உள்நாட்டுச் சூழல்
3. உள்நாட்டுத் தாக்கங்களைப் படைப்புகளாகப் பதிப்பவர் யார்?
அ) அரசியலாளர்
ஆ) சிந்தனையாளர்
இ) இலக்கியலாளர்
ஈ) அறிவியலாளர்
இ) இலக்கியலாளர்
4. கவிஞர் முருகையன் எந்நாட்டைச் சேர்ந்தவர்?
அ) இந்தியா
ஆ) தமிழ்நாடு
இ) மலேசியா
ஈ) ஈழம்
ஈ) ஈழம்
5. கவிஞர் சேரனின் தொகுப்பு நூல் வெளிவந்த ஆண்டு யாது?
அ) 1975
ஆ) 1985
இ) 1995
ஈ) 1980
ஆ) 1985
6. சேரனின் தொகுப்பு நூலின் பெயர் யாது?
அ) மரணம்
ஆ) வாழ்வு
இ) மரணத்துள் வாழ்வோம்
ஈ) வாழ்வில் மரணம்
இ) மரணத்துள் வாழ்வோம்
7. ‘மரணத்துள் வாழ்வோம்’ என்னும் தொகுப்பு நூலை வெளியிட்ட பதிப்பகம் யாது?
அ) வானதி பதிப்பகம்
ஆ) தமிழியல் பதிப்பகம்
இ) மொழியியல் பதிப்பகம்
ஈ) மக்கள் பதிப்பகம்
ஆ) தமிழியல் பதிப்பகம்
8. ‘தமிழியல் பதிப்பகம்’ செயல்படும் இடம் யாது?
அ) யாழ்ப்பாணம்
ஆ) தமிழ்நாடு
இ) கனடா
ஈ) மலேசியா
அ) யாழ்ப்பாணம்
9. பயிர்களைக் காப்பதற்குப் போடப்படுவது யாது?
அ) உரம்
ஆ) எரு
இ) வேலி
ஈ) மதில்சுவர்
இ) வேலி
10. ‘சிறைக்குறிப்புகள்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?
அ) பிடல் காஸ்ட்ரோ
ஆ) ஜூலியஸ் ஃசிக்
இ) நேரு
ஈ) பகத்சிங்
ஆ) ஜூலியஸ் ஃபூசிக்