சுதந்திர தேவி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. அக்காலத்தில் பல புலவர்களும், கவிஞர்களும் தோன்றி ------------- படைத்தனர்.
அக்காலத்தில் பல புலவர்களும், கவிஞர்களும் தோன்றி இறவா இலக்கியங்கள் படைத்தனர்.
2. ‘சுதந்திர தேவியின் துதி’யை இயற்றியவர் --------------.
'சுதந்திர தேவியின் துதி’யை இயற்றியவர் பாரதியார்
3. சுப்பிரமணிய பாரதியார் ---------- அன்று பிறந்தார்
சுப்பிரமணிய பாரதியார் 1882 திசம்பர் 11 அன்று பிறந்தார்.
4. பாரதியார் சுதேசமித்திரன், ------------- இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பாரதியார் சுதேசமித்திரன், இந்தியா இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
5. பாரதியார் காலம் இந்திய ------------- போராட்டக் காலமாகும்.
பாரதியார் காலம் இந்திய விடுதலைப் போராட்டக் காலமாகும்.
6. பாரதியார் -------- என்றும், மகாகவி என்றும் சிறப்பிக்கப்பெறுகிறார்.
பாரதியார் தேசிய கவி என்றும், மகாகவி என்றும் சிறப்பிக்கப்பெறுகிறார்.
7. பாரதியார் தாயார் -------------.
பாரதியார் தாயார் இலக்குமியம்மாள்
8. இதம் என்பதற்கு ----------- என்று பொருளாகும்.
இதம் என்பதற்கு இன்பம் என்று பொருளாகும். .
9. பாரதியார் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் --------- கொண்டவர்.
பாரதியார் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்
10. பாரதியார் காலம் முதல் ----------- தொடங்குகிறது எனலாம்.
பாரதியார் காலம் முதல் இக்கால இலக்கியம் தொடங்குகிறது எனலாம்.