மேன்மை
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. பாவேந்தர் பாரதிதாசனைப் பின்பற்றி ஒரு -------- உருவானது.
பாவேந்தர் பாரதிதாசனைப் பின்பற்றி ஒரு பாட்டுப் பரம்பரை உருவானது.
2. சாலை இளந்திரையன் எழுதியது ----------- என்னும் நூலாகும்.
சாலை இளந்திரையன் எழுதியது தாய் எழில் தமிழ் என்னும் நூலாகும்.
3. சாலை இளந்திரையன் --------- மாவட்டத்தைச் சார்ந்தவர்.
சாலை இளந்திரையன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர்.
4. சாலை இளந்திரையன் ---------- பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
சாலை இளந்திரையன் தில்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.
5. சாலை இளந்திரையன் கவிதைக்கு ----------- வழிகாட்டியாகக் கொண்டவர்.
சாலை இளந்திரையன் கவிதைக்கு பாவேந்தரை வழிகாட்டியாகக் கொண்டவர்.
6. சாலை இளந்திரையனின் துணைவியார் ----------- என்பவர் ஆவர்.
சாலை இளந்திரையனின் துணைவியார் சாலினி இளந்திரையன் என்பவர் ஆவர்.
7. சாலை இளந்திரையன் ---------- மூலம் சமுதாய மேம்பாட்டுக்காகப் பணியாற்றியவர்.
சாலை இளந்திரையன் அறிவியக்கப்பேரவை மூலம் சமுதாய மேம்பாட்டுக்காகப் பணியாற்றியவர்.
8. கல்லைப்போல் ----------- உறுதி வேண்டும்.
கல்லைப்போல் கொள்கையிலே உறுதி வேண்டும்.
9. காவியம் போல் ----------- விரிவு வேண்டும்.
காவியம் போல் இதயத்தில் விரிவு வேண்டும்.
10. புலியைப்போல் அனைத்துயிரும் ----------- வேண்டும்.
புலியைப்போல் அனைத்துயிரும் திமிர்தல் வேண்டும்.