5. இக்கால இலக்கியம்

பெண்கல்வி

பாடல் கருத்து
Theme of the Poem


கண்களால் செல்லவேண்டிய வழியைக் காண முடியும். கால்களால் அவ்வழியே சென்று முன்னேற முடியும். அதுபோல நம் தமிழ்நாடாக இருப்பினும், வேறு எந்நாடாக இருப்பினும் பெண்களால் முன்னேற முடியும்.

படிக்காத பெண்களாக இருந்தால் அதனால் தீமையே விளையும். அந்த ஊமைப் பெண்ணால் எவ்விதப் பயனும் ஏற்படாது. பெண்களின் கல்வியே அவர்களை நல்ல நிலையில் உயர்த்தி வைக்கும்.