5. இக்கால இலக்கியம்

மரணத்துள் வாழ்வோம்

பாடல் கருத்து
Theme of the Poem


வேலியும் காவலும்

பயிர்களைக் காப்பதற்குத்தான் வேலியே போடப் பெறுகிறது. ஆனால் இங்கு வேலியே பயிர்களை மேய்கிறது. எனவே வேலிக்குப் பயிர்கள் மேல் வெறுப்பு இருக்குமானால் வேலி ஏன்? காவலும் ஏன்? இந்த வேலி காவலாகுமா?

உயிர்ப்பு

இரண்டாம் உலகப்போர் நடந்த அன்று விடுதலை வீரன் ஜூலியஸ் ஃபூசிக் சிறையிலிருந்து எழுதிய சிறைக் குறிப்புகள் என்னும் நூல் உலகப் புகழ் பெற்றது. இன்று சிறையிலிருக்கும் நான் அவ்வாறு எழுத எனக்கு விரல்கள் இல்லை. கடந்த காலத்தில் விரல்களையேனும் விட்டு வைத்தார்கள். இன்றைக்கு அவையும் இல்லை