நாட்டுப்புறப் பாடல்
பயிற்சி - 3
Exercise 3
1. நாட்டுப்புறங்களில் படிப்பறிவு இல்லாத மக்களை எவ்வாறு அழைப்பர்?
அ) பாமர மக்கள்
ஆ) கிராம மக்கள்
இ) அறியாதவர்
ஈ) நாட்டுப்புற மக்கள்
அ) பாமர மக்கள்
2. நாட்டுப்புறப் பாடல்கள் எதன் வழியாக நிலைத்து விட்டன?
அ) விழி
ஆ) செவி
இ) இதயம்
ஈ) எண்ணம்
ஆ) செவி
3. நாட்டுப்புறப் பாடல்கள் எதனை வெளிப்படுத்துகின்றன?
அ) இன்பம்
ஆ) துன்பம்
இ) வாழ்க்கை
ஈ) மரணம்
இ) வாழ்க்கை
4. குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் பாடுவது என்ன?
அ) ஒப்பாரி
ஆ) கும்மி
இ) சிந்து
ஈ) தாலாட்டு
ஈ) தாலாட்டு
5. மனித வாழ்வின் இன்பதுன்பங்கள் என்ன வடிவம் பெறுகின்றன?
அ) இசை வடிவம்
ஆ) ஓசை வடிவம்
இ) இரைச்சல் வடிவம்
ஈ) ஒலி வடிவம்
அ) இசை வடிவம்
6. மரணத்துக்குப் பின் பாடப்பெறுவது யாது?
அ) தாலாட்டுப் பாடல்
ஆ) கும்மிப் பாடல்
இ) ஒப்பாரிப் பாடல்
ஈ) கோலாட்டப் பாடல்
இ) ஒப்பாரிப் பாடல்
7. நாட்டுப்பாடல்களை எவ்வாறு கூறலாம்?
அ) ஏட்டில் எழுதாக் கவிதைகள்
ஆ) பாமரப் பாடல்கள்
இ) நாடோடிப் பாடல்கள்
ஈ) படியாதார் பாடல்கள்
அ) ஏட்டில் எழுதாக் கவிதைகள்
8. நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியவர் யார்?
அ) கவிஞர்கள்
ஆ) அறிஞர்கள்
இ) புலவர்கள்
ஈ) பாமர மக்கள்
ஈ) பாமர மக்கள்
9. தம்பி அழுத கண்ணீர் எவ்வாறு பெருகியது?
அ) கடலாக
ஆ) ஆறாக
இ) குளமாக
ஈ) ஏரியாக
ஆ) ஆறாக
10. ஆறாகப் பெருகிய கண்ணீரில் குளித்தது யார்?
அ) தம்பி
ஆ) யானை
இ) பூனை
ஈ) தாய்
ஆ) யானை