பெண்கல்வி
பயிற்சி - 3
Exercise 3
1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
அ) கனகசபை
ஆ) சுப்புரத்தினம்
இ) சுப்பிரமணி
ஈ) சுப்பு
ஆ) சுப்புரத்தினம்
2. பாரதிதாசன் யாரைத் தன் ஆசிரியராக ஏற்றுக் கொண்டார்?
அ) பாரதியார்
ஆ) சுத்தானந்த பாரதியார்
இ) மனோன்மணீயம் சுந்தரனார்
ஈ) திரிகூடராசப்பக்கவிராயர்
அ) பாரதியார்
3. பாரதிதாசன் எத்தகைய விடுதலைக்கான பாடல்களைப் பாடினார்?
அ) தேச விடுதலை
ஆ) ஆன்மீக விடுதலை
இ) சமுதாய விடுதலை
ஈ) பொருளாதார விடுதலை
இ) சமுதாய விடுதலை
4. பாரதிதாசன் பிறந்த இடம் யாது?
அ) சென்னை
ஆ) மதுரை
இ) காரைக்கால்
ஈ) புதுச்சேரி
ஈ) புதுச்சேரி
5. பாரதிதாசன் எப்போது பிறந்தார்?
அ) 1891
ஆ) 1918
இ) 1819
ஈ) 1881
அ) 1891
6. பாரதிதாசனின் தந்தையார் பெயர் என்ன?
அ) சிற்சபை
ஆ) கனகசபை
இ) சபாநாயகம்
ஈ) பொன்னம்பலம்
ஆ) கனகசபை
7. பாரதிதாசனின் சிறப்புப் பெயர் யாது?
அ) அமரகவி
ஆ) தேசிய கவி
இ) புரட்சிக் கவி
ஈ) கவியரசு
இ) புரட்சிக் கவி
8. பெண்களை நல்ல நிலையில் உயர்த்தி வைப்பது எது?
அ) கல்வி
ஆ) செல்வம்
இ) முயற்சி
ஈ) வீரம்
அ) கல்வி
9. படியாத பெண் எப்படிப்பட்டவள்?
அ) ஆமை
ஆ) ஊமை
இ) தீமை
ஈ) சுமை
ஆ) ஊமை
10. பெண்கள் முன்னேற்றம் பற்றி பாரதிதாசன் கருத்து யாது?
அ) முடியும்
ஆ) முடியாது
இ) விடியும்
ஈ) விடியாது
அ) முடியும்