மரணத்துள் வாழ்வோம்
பயிற்சி - 4
Exercise 4
IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1. மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது எது?
ஒரு நாட்டின் அரசியல் சூழ்நிலைகளே மக்களின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்றன.
2. ஒரு நாட்டு மக்கள் புலம்பெயரக் காரணம் யாது?
ஒரு நாட்டின் உள்நாட்டுச் சூழல் காரணமாக மக்கள் அகதிகளாகப் புலம்பெயர்கின்றனர்.
3. இலக்கியலாளர்களின் படைப்புகளில் காண முடிவது எது?
இலக்கியலாளர்களின் படைப்புகளில் அந்நாட்டு அரசியல் தாக்கங்களைக் காணமுடியும்.
4. கவிஞர் முருகையனைப் பற்றிக் கூறுக.
கவிஞர் முருகையன் ஈழநாட்டு மூத்தக் கவிஞர்.
5. கவிஞர் சேரனைப் பற்றிக் குறிப்பு வரைக.
கவிஞர் சேரன் ஈழநாட்டுச் சிறந்த கவிஞர்களுள் ஒருவர்.
6. ஈழக் கவிஞர் சேரன் தொகுத்த நூல் யாது?
ஈழக் கவிஞர் சேரன் தொகுத்த நூல் மரணத்துள் வாழ்வோம் என்பதாகும்.
7. ‘மரணத்துள் வாழ்வோம்’ எப்போது வெளியிடப்பட்டது?
‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற நூல் 1985இல் வெளியிடப் பெற்றது.
8. ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற நூலைப் பற்றி எழுதுக.
யாழ்ப்பாணம் ‘தமிழியல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள இந்நூலில் 31 கவிஞர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
9. வேலி போடுவதன் நோக்கம் யாது?
பயிர்களைக் காப்பதே வேலி போடுவதன் நோக்கமாகும்.
10. சூலியசு ஃபூசிக் எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் எது?
சூலியசு ஃபூசிக் எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல் ‘சிறைக் குறிப்புகள்’ என்பதாகும்.