5. இக்கால இலக்கியம்

பெண்கல்வி

பாடல்
Poem


பெண்கல்வி

பெண்களால் முன்னேறக் கூடும் - நம்

வண்தமிழ் நாடும் எந்நாடும்

கண்களால் வழிகாண முடிவதைப் போலே

கால்களால் முன்னேற முடிவதைப் போலே

பெண்களால் முன்னேறக் கூடும்.

 

படியாத பெண்ணினால் தீமை - என்ன

பயன்விளைப் பாள் அந்த ஊமை

நெடுந்தமிழ் நாடெனும் செல்வி - நல்ல

நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி

பெண்களால் முன்னேறக் கூடும்.

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்