பெண்கல்வி
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

இப்பாடலைப் பாடியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இவரது இயற்பெயர் சுப்புரத்தினம். இவர் புதுச்சேரியில் 29.4.1891 இல் பிறந்தார். பாரதியார் ஆங்கில ஆட்சியின் அடக்குமுறையால் புதுச்சேரியில் சில காலம் வாழ்ந்தார். அப்போது அவருக்குத் துணையாக இருந்த சுப்புரத்தினம், அவர்மீது கொண்ட பேரன்பின் காரணமாக, பாரதிதாசன் எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
இவரது பெற்றோர் கனகசபை-இலக்குமி அம்மாள். பெண் விடுதலை, சாதியொழிப்பு, சமூகச் சீர்திருத்தம், பொதுவுடைமை, தமிழுணர்வு பகுத்தறிவு கொண்ட பாடல்கள் இயற்றியதால் இவர் புரட்சிக் கவிஞர் எனவும், பாவேந்தர் எனவும் சிறப்பிக்கப்பெற்றார். பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் முதலான பல நூல்களைப் படைத்துள்ளார். இவர் 21.4.1964இல் இயற்கை எய்தினார்.