நாட்டுப்புறப் பாடல்
பாடல்
Poem
தாலாட்டு
ஆராரோ ஆரிவரோ ! ஆரிவரோ ஆராரோ !
தம்பி அழுத கண்ணீர் தடவழி பாய்ந்தேறி
ஆறாகப் பெருகி ஆனைகுளித் தேறி
இஞ்சிக்குப் பாய்ந்து எலுமிச்சை வேரோடி
மஞ்சளுக்குப் பாய்ந்து மருக்கொழுந்து வேரோடி
தாழைக்குப் பாய்கையிலே தழும்பியதாம் கண்ணீரும்
வாழைக்குப் பாய்கையிலே வற்றியதாம் கண்ணீரும்.