5. இக்கால இலக்கியம்

மரணத்துள் வாழ்வோம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  மக்களின் வாழ்நிலைகளை நாட்டின் ---------- சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன.

மக்களின் வாழ்நிலைகளை நாட்டின் அரசியல் சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன.

2.  உள்நாட்டுச் சூழல் காரணமாகப் பலர் --------- ஆக்கப்பெற்றுள்ளனர்.

உள்நாட்டுச் சூழல் காரணமாகப் பலர் பலர் அகதிகளாக (ஏதிலிகளாக) ஆக்கப்பெற்றுள்ளனர்.

3.  அரசியல் தாக்கங்களை அந்தந்த நாட்டு --------- படைப்புகளில் காணமுடியும்.

அரசியல் தாக்கங்களை அந்தந்த நாட்டு இலக்கியப் படைப்புகளில் காணமுடியும்.

4.  கவிஞர் உ.சேரன் ----------- படைப்பாளி.

கவிஞர் உ.சேரன் ஈழத்தின் படைப்பாளி

5.  கவிஞன் முருகையன் ஈழத்தின் ----------- கவிஞர் ஆவார்.

கவிஞன் முருகையன் ஈழத்தின் மூத்தக் கவிஞர் ஆவார்.

6.  சேரன் சிறந்த கவிஞர் மட்டுமல்லாமல், நூலின் ----------- உள்ளார்.

சேரன் சிறந்த கவிஞர் மட்டுமல்லாமல், நூலின் தொகுப்பாளராகவும் உள்ளார்.

7.  கவிஞர் சேரன் தொகுத்த நூலின் பெயர் ------------.

கவிஞர் சேரன் தொகுத்த நூலின் பெயர் மரணத்துள் வாழ்வோம்.

8.  ‘மரணத்துள் வாழ்வோம்’ ---------- இல் வெளியிடப்பட்டது.

‘மரணத்துள் வாழ்வோம்’ 1985 இல் வெளியிடப்பட்டது.

9.  ‘தமிழியல் பதிப்பகம்’ ---------------- உள்ளது.

‘தமிழியல் பதிப்பகம்’ யாழ்ப்பாணத்தில் உள்ளது

10.  பயிர்களைக் காப்பதற்கே ----------- போடப்பெறுகிறது.

பயிர்களைக் காப்பதற்கே வேலி போடப்பெறுகிறது.