சுதந்திர தேவி
பாடல்
Poem
சுதந்திர தேவி
இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதந்திரு இரண்டும் மாறி
பழிமிகுந் திழிவுற் றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்
சுதந்திர தேவி ! நின்னைத்
தொழுதிடல் மறக்கி லேனே !
- சி. சுப்பிரமணிய பாரதியார்
