5. இக்கால இலக்கியம்

பெண்கல்வி

பாட அறிமுகம்
Introduction to lesson


பாரதியாரின் மாணவராகத் தம்மைப் பெயராலும் அறிமுகப்படுத்திக் கொண்டவர் பாரதிதாசன். பாரதியார் தேச விடுதலைக்கான பாடல்களைப் பாடினார். பாரதிதாசன் சமுதாய விடுதலைக்கான பாடல்களைப் பாடினார். அவர் பெண்களின் விடுதலை பற்றி நிறையக் கவிதைகள் இயற்றியுள்ளார். அவற்றுள் ஒன்றான பெண்கல்வியே நமது பாடப் பகுதியாகும்.