சுதந்திர தேவி
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author

பாரதியார்
இப்பாடலை எழுதியவர் சுப்பிரமணிய பாரதியார். இவர் 1882ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 11ஆம் நாள் எட்டயபுரத்தில் பிறந்தார். பெற்றோர் சின்னச்சாமி, இலக்குமியம்மாள். துணைவியார் செல்லம்மாள். இவர் தேச விடுதலைப் போராட்டத்தில் முனைப்புடன் பங்கு கொண்டவர். இதனால், இவர் தேசிய கவி என்றும், மகாகவி என்றும் சிறப்பிக்கப்பெறுகிறார். சுதேசமித்திரன், இந்தியா இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் பாடல்களும், வசன கவிதைகளும், உரைநடைகளும் பல நூல்களாக வெளிவந்து பாராட்டப்பெறுகின்றன. இவர் 11.9.1921 இல் உலக வாழ்வை நீத்தார். இவற்றில் குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியன முப்பெரும் படைப்புகளாகும்.