5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பாடல் கருத்து
Theme of the Poem


“கண்ணே! உன்னை அடித்தது யார்? தம்பி அழுத கண்ணீர் பாய்ந்து ஓடி ஆறாகப் பெருகிவிட்டது. அந்த ஆற்று நீரில் யானையும் குளித்தது. அதன் பிறகு அந்நீர் இஞ்சிக்கும், எலுமிச்சைக்கும் பாய்ந்து வேரோடியது. பிறகு மஞ்சளுக்கும், மருக்கொழுந்துக்கும் பாய்ந்து வேரோடியது. அதன் பிறகு தாழைக்குப் பாய்ந்தபோது கண்ணீர் தழும்பியது. வாழைக்குப் பாயும்போது கண்ணீர் வற்றியது” எனத் தன் குழந்தை சிந்துகின்ற கண்ணீரில் தாயின் கற்பனை சிறகடித்துப் பறக்கத் தாலாட்டுப் பாடுகிறாள்.