மேன்மை
பயிற்சி - 4
Exercise 4
1. பாட்டுப் பரம்பரை யாரைப் பின்பற்றி உருவானது?
பாவேந்தர் பாரதிதாசனைப் பின்பற்றிப் பாட்டுப் பரம்பரை உருவானது.
2. ‘தாய் எழில் தமிழ்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
‘தாய் எழில் தமிழ்’ என்ற நூலின் ஆசிரியர் சாலை இளந்திரையன்.
3. சாலை இளந்திரையன் வாழ்ந்த காலம் யாது?
சாலை இளந்திரையன் வாழ்ந்த காலம் 6-9-1930 முதல் 4-10-1998 வரையாகும்.
4. சாலை இளந்திரையன் பிறந்த ஊர் எது?
சாலை இளந்திரையன் திருநெல்வேலி அருகில் சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் ஊரில் பிறந்தார்.
5. சாலை இளந்திரையன் யாரை வழிகாட்டியாகக் கொண்டார்?
சாலை இளந்திரையன் கருத்துக்குப் பெரியாரையும், கவிதைக்குப் பாவேந்தரையும் வழிகாட்டியாகக் கொண்டார்.
6. சாலை இளந்திரையன் பெற்ற சிறப்புகள் யாவை?
சாலை இளந்திரையன் எழுச்சிச் சான்றோர், திருப்புமுனைச் சிந்தனையாளர் என்னும் சிறப்புகளைப் பெற்றவர்.
7. சாலை இளந்திரையன் சமுதாயப் பணிகள் குறித்து எழுதுக.
சாலை இளந்திரையன் ‘அறிவியக்கப் பேரவை’ மூலம் சமுதாய மேம்பாட்டுக்காகத் தொண்டாற்றினார்.
8. எவ்வித உறுதி வேண்டும் எனச் சாலை இளந்திரையன் கூறுகிறார்?
கொண்ட கொள்கையில் கல்லைப்போல உறுதி வேண்டும் எனச் சாலை இளந்திரையன் கூறுகிறார்.
9. சொல்லும், செயலும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சாலை இளந்திரையன் பாடுகிறார்?
சொல்லைப் போலவே செயலும் இருக்க வேண்டும் என்று சாலை இளந்திரையன் பாடுகிறார்.
10. அனைத்து உயிரும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சாலை இளந்திரையன் கூறுகிறார்?
புல்லைப் போலத் துவண்டு போகாமல் புலியைப் போல செம்மாந்து நிற்க வேண்டும் என்று சாலை இளந்திரையன் கூறுகிறார்.