5. இக்கால இலக்கியம்

மேன்மை

பாடல்
Poem


மேன்மை

கல்லைப்போல் கொள்கையிலே உறுதி வேண்டும்

காவியம்போல் இதயத்தில் விரிவு வேண்டும்

சொல்லைப்போல் செயலிருக்க வேண்டு மென்று

சொன்னவர்கள் நினைவொன்றே நெஞ்சில் வேண்டும்

புல்லைப்போல் துவள்கின்ற போக்கை மாற்றிப்

புலியைப்போல் அனைத்துயிரும் திமிர வேண்டும்

சொல்லைப்போல் இருந்துகொண்டே இந்த மேன்மைச்

சுடரொளிகள் பரப்புவதே தமிழின் மேன்மை!

- சாலை இளந்திரையன்