5. இக்கால இலக்கியம்

சுதந்திர தேவி

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  ‘சுதந்திர தேவியின் துதி’யை இயற்றியவர் யார்?

அ) பாரதிதாசன்

ஆ) கண்ணதாசன்

இ) பாரதியார்

ஈ) சுரதா

இ) பாரதியார்

2.  பாரதியார் பிறந்த ஊர் எது?

அ) எட்டயபுரம்

ஆ) மதுரை

இ) திருநெல்வேலி

ஈ) சென்னை

அ) எட்டயபுரம்

3.  பாரதியாரின் துணைவியார் பெயர் யாது?

அ) இலக்குமி

ஆ) செல்லம்மாள்

இ) சரசுவதி

ஈ) செயலட்சுமி

ஆ) செல்லம்மாள்

4.  பாரதியார் வாழ்ந்த காலம் எப்படிப்பட்டது?

அ) அமைதிக் காலம்

ஆ) எழுச்சிக் காலம்

இ) போராட்டக் காலம்

ஈ) புரட்சிக் காலம்

இ) போராட்டக் காலம்

5.  இக்கால இலக்கியம் யார் காலத்திலிருந்து தொடங்குகிறது?

அ) நாமக்கல் கவிஞர்

ஆ) கவிமணி

இ) பாரதியார்

ஈ) பாரதிதாசன்

இ) பாரதியார்

6.  பாரதியாரின் தந்தையார் பெயர் யாது?

அ) பெரியசாமி

ஆ) சின்னச்சாமி

இ) அய்யாசாமி

ஈ) வீராசாமி

ஆ) சின்னச்சாமி

7.  பாரதியார் பிறந்த ஆண்டு யாது?

அ) 1288

ஆ) 1882

இ) 1982

ஈ) 1782

ஆ) 1882

8.  பாரதியார் எவ்வாறு சிறப்பிக்கப் பெறுகிறார்?

அ) தேசிய கவி

ஆ) வரகவி

இ) கவிமணி

ஈ) கவி வேந்தர்

அ) தேசிய கவி

9.  பாரதியார் பணியாற்றிய நாளிதழ் எது?

அ) தினமணி

ஆ) சுதேசமித்திரன்

இ) தினகரன்

ஈ) தினசரி

ஆ) சுதேசமித்திரன்

10.  பாரதியார் எப்போது மறைந்தார்?

அ) 1921

ஆ) 1931

இ) 1941

ஈ) 1951

அ) 1921