பெண்கல்வி
பயிற்சி - 4
Exercise 4
1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதாகும்.
2. சுப்புரத்தினம் தம் பெயரை மாற்றிக் கொண்டது ஏன்?
பாரதியார் மேல் கொண்ட பற்றின் காரணமாக சுப்புரத்தினம் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
3. பாரதிதாசன் எங்குப் பிறந்தார்?
பாரதிதாசன் புதுச்சேரியில் பிறந்தார்.
4. பாரதிதாசன் பிறந்த நாள் யாது?
பாரதிதாசன் 1891 ஏப்ரல் 29 அன்று பிறந்தார்.
5. பாரதியார் புதுச்சேரியில் ஏன் வாழ்ந்தார்?
ஆங்கில ஆட்சியின் அடக்குமுறையால் பாரதியார் சிறிது காலம் புதுச்சேரியில் வாழ்ந்தார்.
6. பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?
கனகசபை மற்றும் இலக்குமியம்மாள் பாரதிதாசனின் பெற்றோர் ஆவர்..
7. பாரதிதாசன் ‘புரட்சிக்கவிஞர்’ என ஏன் சிறப்பிக்கப்பெற்றார்?
பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமுதாயச் சீர்திருத்தம், பொதுவுடைமை, தமிழுணர்வு கொண்ட பாடல்களை இயற்றியதால் பாரதிதாசன் ‘புரட்சிக்கவிஞர்’ எனச் சிறப்பிக்கப்பெற்றார்.
8. பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பற்றிக் கூறுக.
பாரதியார் நாட்டு விடுதலைக்கான பாடல்களையும், பாரதிதாசன் சமுதாய விடுதலைக்கான பாடல்களையும் பாடினர்.
9. ‘பெண்கல்வி’ என்ற பாடலை எழுதியவர் யார்?
பெண்கல்வி என்ற பாடலை எழுதியவர் பாரதிதாசன்.
10. பெண்களால் முன்னேற முடியும் என்பதை பாரதிதாசன் எவ்வாறு விளக்குகிறார்?
கண்களால் வழி காண்பது, கால்களால் முன்னேற்றம் காண்பது போல பெண்களால் முன்னேற முடியும் என்று பாரதிதாசன் விளக்குகிறார்.