பெண்கல்வி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. பாரதிதாசன் தம்மை ------------ மாணவராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பாரதிதாசன் தம்மை பாரதியார் மாணவராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
2. பாரதிதாசன் -------------- பாடல்களைப் பாடினார்.
பாரதிதாசன் சமுதாய விடுதலைப் பாடல்களைப் பாடினார்.
3. பாரதிதாசனின் ----------- நமது பாடப்பகுதியாகும்.
பாரதிதாசனின் பெண்கல்வி நமது பாடப்பகுதியாகும்.
4. பாரதிதாசன் இயற்பெயர் ----------- என்பதாகும்.
பாரதிதாசன் இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதாகும்
5. பாரதியார் சிறிது காலம் ----------யில் வாழ்ந்தார்.
பாரதியார் சிறிது காலம் புதுச்சேரியில் வாழ்ந்தார்
6. பாரதியார் மேல் கொண்ட பற்றின் காரணமாக ----------- எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.
பாரதியார் மேல் கொண்ட பற்றின் காரணமாக பாரதிதாசன் எனப் பெயரை மாற்றிக் கொண்டார்.
7. பாரதிதாசனின் தந்தையார் பெயர் ---------- என்பதாகும்.
பாரதிதாசனின் தந்தையார் பெயர் கனகசபை என்பதாகும்
8. பாரதிதாசனை ‘புரட்சிக் கவிஞர்’ எனவும், ------- எனவும் மக்கள் சிறப்பித்தனர்.
பாரதிதாசனை ‘புரட்சிக் கவிஞர்’ எனவும், பாவேந்தர் எனவும் மக்கள் சிறப்பித்தனர். .
9. கண்களால் ------------ காண முடியும்.
கண்களால் வழி காண முடியும்.
10. பெண்களால் --------- முடியும்.
பெண்களால் முன்னேற முடியும்.