முகப்பு |
பாலை |
7. பாலை |
வில்லோன் காலன கழலே; தொடியோள் |
||
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர் |
||
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர் |
||
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி, |
||
வாகை வெண் நெற்று ஒலிக்கும் |
||
வேய் பயில் அழுவம் முன்னியோரே. | உரை | |
செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார் |
10. மருதம் |
யாய் ஆகியளே விழவு முதலாட்டி; |
||
பயறு போல் இணர பைந் தாது படீஇயர் |
||
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக் |
||
காஞ்சி ஊரன் கொடுமை |
||
கரந்தனள் ஆகலின், நாணிய வருமே. | உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - ஓரம்போகியர் |
11. பாலை |
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
||
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி, |
||
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே |
||
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது, |
||
குல்லைக் கண்ணி வடுகர் முனையது |
||
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர் |
||
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், |
||
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே. | உரை | |
தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது. - மாமூலனார் |
12. பாலை |
எறும்பி அளையின் குறும் பல் சுனைய |
||
உலைக்கல் அன்ன பாறை ஏறி, |
||
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும் |
||
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே; |
||
அது மற்று அவலம் கொள்ளாது, |
||
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஓதலாந்தையார் |
15. பாலை |
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு |
||
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய |
||
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல, |
||
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல் |
||
சேயிலை வெள் வேல் விடலையொடு |
||
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. | உரை | |
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார் |
16. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர் |
||
பொன் புனை பகழி செப்பம் கொண்மார், |
||
உகிர் நுதி புரட்டும் ஓசை போல, |
||
செங் காற் பல்லி தன் துணை பயிரும் |
||
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
20. பாலை |
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து, |
||
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், |
||
உரவோர் உரவோர் ஆக! |
||
மடவம் ஆக, மடந்தை, நாமே! | உரை | |
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கோப்பெருஞ் சோழன் |
22. பாலை |
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய, |
||
யாரோ பிரிகிற்பவரே?-சாரல் |
||
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து |
||
வேனில் அம் சினை கமழும் |
||
தேம் ஊர் ஒண்ணுதல்!-நின்னொடும், செலவே. | உரை | |
செலவுக்குறிப்பறிந்து ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- சேரமான் எந்தை |
27. பாலை |
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, |
||
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு, |
||
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது, |
||
பசலை உணீஇயர் வேண்டும்- |
||
திதலை அல்குல் என் மாமைக் கவினே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார் |
28. பாலை |
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்? |
||
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு, |
||
'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?- |
||
அலமரல் அசைவளி அலைப்ப, என் |
||
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே. | உரை | |
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஒளவையார் |
30. பாலை |
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல், |
||
பொய்வலாளன் மெய் உற மரீஇய |
||
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து, |
||
அமளி தைவந்தனனே; குவளை |
||
வண்டு படு மலரின் சாஅய்த்' |
||
தமியென்; மன்ற அளியென் யானே! | உரை | |
'அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?' என வினாய தோழிக்குத் தலைமகள்,'யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலி |
37. பாலை |
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்; |
||
பிடி பசி களைஇய பெருங் கை வேழம் |
||
மென் சினை யாஅம் பொளிக்கும் |
||
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே. | உரை | |
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
39. பாலை |
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென, |
||
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் |
||
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம் |
||
முலையிடை முனிநர் சென்ற ஆறே. | உரை | |
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார் |
41. பாலை |
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, |
||
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற; |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
||
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் |
||
புலப்பில் போலப் புல்லென்று |
||
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே. | உரை | |
பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- அணிலாடு முன்றிலார் |
43. பாலை |
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே; |
||
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே: |
||
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல், |
||
நல்அராக் கதுவியாங்கு, என் |
||
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே. | உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார் |
44. பாலை |
காலே பரி தப்பினவே; கண்ணே |
||
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே; |
||
அகல் இரு விசும்பின் மீனினும் |
||
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே. | உரை | |
இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
48. பாலை |
'தாதின் செய்த தண் பனிப் பாவை |
||
காலை வருந்தும் கையாறு ஓம்பு' என, |
||
ஓரை ஆயம் கூறக் கேட்டும், |
||
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் |
||
நன்னுதல் பசலை நீங்க, அன்ன |
||
நசை ஆகு பண்பின் ஒரு சொல் |
||
இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே? | உரை | |
பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணப்பொழுது பெரிதாகலின், வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது. - பூங்கணுத்திரையார் |
56. பாலை |
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் |
||
குளவி மொய்த்த அழுகற் சில் நீர் |
||
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர், |
||
வருகதில் அம்ம, தானே; |
||
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே! | உரை | |
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார் |
59. பாலை |
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் |
||
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக் |
||
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் |
||
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும், |
||
சுரம் பல விலங்கிய அரும் பொருள் |
||
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே. | உரை | |
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார் |
63. பாலை |
'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' எனச் |
||
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு |
||
அம் மா அரிவையும் வருமோ? |
||
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே! | உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - உகாய்க்குடி கிழார் |
67. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை |
||
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் |
||
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் |
||
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் |
||
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? | உரை | |
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை |
71. பாலை |
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே- |
||
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை, |
||
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், |
||
கல் கெழு கானவர் நல்குறு மகளே. | உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது -கருவூர் ஓதஞானி |
77. பாலை |
அம்ம வாழி, தோழி!-யாவதும், |
||
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து |
||
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை |
||
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் |
||
அரிய கானம் சென்றோர்க்கு |
||
எளிய ஆகிய தட மென் தோளே. | உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் |
79. பாலை |
கான யானை தோல் நயந்து உண்ட |
||
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை |
||
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப் |
||
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் |
||
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் |
||
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு |
||
ஒல்லேம் என்ற தப்பற்குச் |
||
சொல்லாது ஏகல் வல்லுவோரே. | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன் |
84. பாலை |
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்; |
||
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே- |
||
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
||
வேங்கையும் காந்தளும் நாறி, |
||
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே. | உரை | |
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன் |
104. பாலை |
அம்ம வாழி, தோழி! காதலர், |
||
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப, |
||
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் |
||
பனி படு நாளே, பிரிந்தனர்; |
||
பிரியும் நாளும் பல ஆகுபவே! | உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; 'சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார். |
124. பாலை |
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை, |
||
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு |
||
இன்னா என்றிர்ஆயின், |
||
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே? | உரை | |
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
130. பாலை |
நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்; |
||
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்; |
||
நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின் |
||
குடிமுறை குடிமுறை தேரின், |
||
கெடுநரும் உளரோ?-நம் காதலோரே. | உரை | |
பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; 'நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;நின் ஆற்றாமை நீங்குக!' என |
131.பாலை |
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள் |
||
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே |
||
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே, |
||
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து |
||
ஓர் ஏர் உழவன் போல, |
||
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே, | உரை | |
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. - ஓரேருழவனார் |
135. பாலை |
'வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் |
||
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என, |
||
நமக்கு உரைத்தோரும் தாமே, |
||
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே. | உரை | |
'தலைமகன் பிரியும்' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ. |
137. பாலை |
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப, |
||
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து |
||
இரவலர் வாரா வைகல் |
||
பல ஆகுக!-யான் செலவுறு தகவே. | உரை | |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
140. பாலை |
வேதின வெரிநின் ஓதி முது போத்து, |
||
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும் |
||
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து, |
||
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் |
||
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்த இடத்து, 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லை. |
144. பாலை |
கழிய காவி குற்றும், கடல |
||
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே |
||
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர, |
||
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப் |
||
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ- |
||
செல் மழை தவழும் சென்னி |
||
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே! | உரை | |
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன் |
147. பாலை |
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன |
||
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை, |
||
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல, |
||
இன் துயில் எடுப்புதி-கனவே!- |
||
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே. | உரை | |
தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன் |
149. பாலை |
அளிதோ தானே-நாணே நம்மொடு |
||
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே, |
||
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை |
||
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு, |
||
தாங்கும் அளவைத் தாங்கி, |
||
காமம் நெரிதரக் கைந் நில்லாதே. | உரை | |
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் |
151. பாலை |
வங்காக் கடந்த செங் கால் பேடை |
||
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது, |
||
குழல் இசைக் குரல குறும் பல அகவும் |
||
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது, |
||
'மறப்பு அருங் காதலி ஒழிய |
||
இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே. | உரை | |
பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - தூங்கலோரி |
154. பாலை |
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின் |
||
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து, |
||
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி, |
||
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை |
||
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத் |
||
தயங்க இருந்து, புலம்பக் கூஉம் |
||
அருஞ் சுர வைப்பின் கானம் |
||
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன் |
168. பாலை |
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை |
||
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து |
||
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன |
||
நறுந் தண்ணியளே, நல் மா மேனி; |
||
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் |
||
மணத்தலும் தணத்தலும் இலமே; |
||
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே. | உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார் |
174. பாலை |
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக் |
||
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி |
||
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் |
||
அத்தம் அரிய என்னார், நத்துறந்து, |
||
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப் |
||
பொருளே மன்ற பொருளே; |
||
அருளே மன்ற ஆரும் இல்லதுவே. | உரை | |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி |
180. பாலை |
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி |
||
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து, |
||
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன |
||
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து, |
||
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல் |
||
அவ் வரி வாடத் துறந்தோர் |
||
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே? | உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார் |
189. பாலை |
இன்றே சென்று வருதும்; நாளைக் |
||
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக, |
||
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி |
||
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப, |
||
கால் இயல் செலவின், மாலை எய்தி, |
||
சில் நிரை வால் வளைக் குறுமகள் |
||
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே. | உரை | |
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன். |
192. பாலை |
'ஈங்கே வருவர், இனையல், அவர்' என, |
||
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!- |
||
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின் |
||
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை |
||
நறுந் தாது கொழுதும் பொழுதும், |
||
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
207. பாலை |
'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று, |
||
அத்த ஓமை அம் கவட்டு இருந்த |
||
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் |
||
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி, |
||
நல் அடி பொறிப்பத் தாஅய்ச் |
||
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து. 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன். |
209. பாலை |
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய் |
||
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும் |
||
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே, |
||
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல் |
||
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் |
||
தளை அவிழ் பல் போது கமழும் |
||
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே. | உரை | |
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ |
211. பாலை |
அம் சில் ஓதி ஆய் வளை நெகிழ |
||
நொந்தும், நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் |
||
எஞ்சினம் வாழி-தோழி!-எஞ்சாது |
||
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெஞ் சினை |
||
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி, |
||
ஆராது பெயரும் தும்பி |
||
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே. | உரை | |
'இடைச்சுரத்துக் கவலுவன கண்டு, "நம்மை ஆற்றார்" என நினைந்து மீள்வர்கொல்?'எனக் கவன்ற கிழத்திக்குத் தோழி சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் |
213. பாலை |
நசை நன்கு உடையர்-தோழி!-ஞெரேரெனக் |
||
கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப் |
||
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந் ததரல் |
||
ஒழியின் உண்டு, அழிவு இல் நெஞ்சின் |
||
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி, |
||
நின்று வெயில் கழிக்கும் என்ப-நம் |
||
இன் துயில் முனிநர் சென்ற ஆறே. | உரை | |
'நம்பெருமான் நம்பொருட்டு இடைநின்று மீள்வான்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது. - கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன் |
215. பாலை |
படரும் பைபயப் பெயரும்; சுடரும் |
||
என்றூழ் மா மலை மறையும்; இன்று அவர் |
||
வருவர்கொல், வாழி-தோழி!-நீர் இல் |
||
வறுங் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை |
||
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் |
||
கொடு வரி இரும் புலி காக்கும் |
||
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே. | உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
216. பாலை |
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை |
||
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே; |
||
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும் |
||
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே; |
||
'அன்னள் அளியள்' என்னாது, மா மழை |
||
இன்னும் பெய்யும்; முழங்கி |
||
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே | உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன |
218.பாலை |
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் |
||
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்; |
||
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்; |
||
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!- |
||
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று |
||
இமைப்பு வரை அமையா நம் வயின் |
||
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே. | உரை | |
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கொற்றன் |
224. பாலை |
கவலை யாத்த அவல நீள் இடைச் |
||
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா |
||
நோயினும் நோய் ஆகின்றே-கூவற் |
||
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட |
||
உயர்திணை ஊமன் போலத் |
||
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே. | உரை | |
பிரிவிடை 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன் |
229. பாலை |
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் |
||
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும், |
||
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது, |
||
ஏதில் சிறு செரு உறுபமன்னோ! |
||
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல் |
||
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர் |
||
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே. | உரை | |
இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது. - மோதாசனார் |
232. பாலை |
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும், |
||
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?- |
||
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை, |
||
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய |
||
யாஅ வரி நிழல், துஞ்சும் |
||
மா இருஞ் சோலை மலை இறந்தோரே. | உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை |
235. பாலை |
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின் |
||
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக் |
||
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி |
||
மரையினம் ஆரும் முன்றில் |
||
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே. | உரை | |
வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன். |
237. பாலை |
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ, |
||
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய |
||
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும் |
||
சேய அம்ம, இருவாம் இடையே; |
||
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு, |
||
கோட் புலி வழங்கும் சோலை |
||
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே? | உரை | |
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை |
250. பாலை |
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு, |
||
இரலை நல் மான் நெறிமுதல் உகளும் |
||
மாலை வாரா அளவை, கால் இயல் |
||
கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப் |
||
பொரு கயல் முரணிய உண்கண் |
||
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே. | உரை | |
தலைமகன் பாகற்கு உரைத்தது. - நாமலார் மகன் இளங்கண்ணன் |
253.பாலை |
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின், |
||
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல் |
||
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின் |
||
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ- |
||
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், |
||
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை |
||
ஆறு செல் மாக்கள் சேக்கும் |
||
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. | உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன் |
254. பாலை |
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப, |
||
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் |
||
தலை அலர் வந்தன; வாரா-தோழி!- |
||
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்; |
||
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்- |
||
'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் |
||
எய்தினரால்' என, வரூஉம் தூதே. | உரை | |
பருவங் கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான் |
255. பாலை |
பொத்து இல் காழ அத்த யாஅத்துப் |
||
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி, |
||
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச் |
||
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும் |
||
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!- |
||
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும் |
||
காமர் பொருட்பிணிப் போகிய |
||
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. | உரை | |
'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன் |
256. பாலை |
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப் |
||
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி, |
||
மான் ஏறு உகளும் கானம் பிற்பட, |
||
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத் |
||
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச் |
||
சொல்லாமுன்னர், நில்லா ஆகி, |
||
நீர் விலங்கு அழுதல் ஆனா, |
||
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே. | உரை | |
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது. |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. | உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
262. பாலை |
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென, |
||
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை |
||
தானே இருக்க, தன் மனை; யானே, |
||
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க |
||
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு, |
||
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன், |
||
கரும்பு நடு பாத்தி அன்ன, |
||
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே. | உரை | |
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ |
266. பாலை |
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று |
||
இன்னா இரவின் இன் துணை ஆகிய |
||
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ- |
||
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத் |
||
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?- | உரை | |
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர் |
267. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் |
||
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின் |
||
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன |
||
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க் |
||
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய, |
||
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும் |
||
உறல் முறை மரபின் கூற்றத்து |
||
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே. | உரை | |
'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார் |
273. பாலை |
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப் |
||
பெருங் காடு உளரும் அசைவளி போல, |
||
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே! |
||
நொந்தனஆயின், கண்டது மொழிவல்; |
||
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு |
||
அறியாது ஏறிய மடவோன் போல, |
||
ஏமாந்தன்று, இவ் உலகம்; |
||
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே. | உரை | |
'பிரிவர்' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார் |
274. பாலை |
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து |
||
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர, |
||
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு, |
||
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் |
||
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் |
||
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு |
||
மணி மிடை அல்குல் மடந்தை |
||
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே. | உரை | |
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன் |
277. பாலை |
ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை, |
||
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது |
||
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி, |
||
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் |
||
சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே- |
||
'மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை, |
||
எக் கால் வருவது?' என்றி; |
||
அக் கால் வருவர், எம் காதலோரே. | உரை | |
தலைமகன் பிரிந்தவழி, அவன் குறித்த பருவ வரவு தோழி அறிவரைக் கண்டு வினாவியது. - ஓரிற் பிச்சையார் |
278. பாலை |
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து |
||
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச் |
||
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார் |
||
கொடியர் வாழி-தோழி!-கடுவன் |
||
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து, |
||
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும் |
||
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே. | உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன் |
281. பாலை |
வெண் மணற் பொதுளிய |
||
பைங் கால் கருக்கின் |
||
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு, |
||
அத்த வேம்பின் அமலை வான் பூச் |
||
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
||
குன்று தலைமணந்த கானம் |
||
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே? | உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன் |
282. பாலை |
செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த |
||
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை |
||
நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும் |
||
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை, |
||
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த |
||
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர் |
||
ஆர் கழல்பு உகுவ போல, |
||
சோர்குவஅல்ல என்பர்கொல்-நமரே? | உரை | |
வினவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது. - நாகம் போத்தன் |
283. பாலை |
'உள்ளது சிதைப்போர்' உளர் எனப்படாஅர்; |
||
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு' எனச் |
||
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் |
||
சென்றனர் வாழி-தோழி-என்றும் |
||
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர் |
||
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த |
||
படு முடைப் பருந்து பார்த்திருக்கும் |
||
நெடு மூதிடைய நீர் இல் ஆறே. | உரை | |
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்'. என்று, கிழத்தி சொல் |
285. பாலை |
வைகா வைகல் வைகவும் வாரார்; |
||
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்; |
||
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர் |
||
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ் |
||
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு |
||
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை |
||
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும் |
||
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. | உரை | |
பருவங் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது. - பூதத் தேவன் |
307. பாலை |
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ, |
||
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி, |
||
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ, |
||
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன் |
||
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, |
||
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி, |
||
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து, |
||
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் |
||
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே? | உரை | |
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன் |
329. பாலை |
கான இருப்பை வேனில் வெண் பூ |
||
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, |
||
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் |
||
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, |
||
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, |
||
தெள் நீர் நிகர்மலர் புரையும் |
||
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே. | உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார் |
331. பாலை |
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, |
||
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று, |
||
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் |
||
கடுங்கண் யானைக் கானம் நீந்தி, |
||
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப் |
||
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன |
||
நல் மா மேனி பசப்ப, |
||
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன் |
332. குறிஞ்சி |
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள், |
||
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து |
||
கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர் |
||
மடப் பிடி தழீஇத் தடக் கை யானை |
||
குன்றகச் சிறுகுடி இழிதரும் |
||
மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே? | உரை | |
வரையாது வந்தொழுகாநின்ற காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத் தோழி கூறியது.- மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன் |
338. குறிஞ்சி |
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு |
||
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, |
||
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல, |
||
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை, |
||
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் |
||
வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள் |
||
விளங்கு நகர் அடங்கிய கற்பின் |
||
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே. | உரை | |
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பெருங்குன்றூர் கிழார் |
343. பாலை |
நினையாய் வாழி-தோழி!-நனை கவுள் |
||
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென- |
||
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை- |
||
வெண் கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக் |
||
கோடை ஒற்றிய கருங் கால் வேங்கை |
||
வாடு பூஞ் சினையின், கிடக்கும் |
||
உயர் வரை நாடனொடு பெயருமாறே. | உரை | |
தோழி கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது. - ஈழத்துப் பூதன் தேவன் |
347. பாலை |
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல் |
||
குமரி வாகைக் கோலுடை நறு வீ |
||
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் |
||
கான நீள் இடை, தானும் நம்மொடு |
||
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், |
||
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே. | உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன் |
348. பாலை |
தாமே செல்பஆயின், கானத்துப் |
||
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த |
||
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய், |
||
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில் |
||
பூண் அக வன் முலை நனைத்தலும் |
||
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே? | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன் |
350. பாலை |
அம்ம வாழி-தோழி!-முன் நின்று, |
||
'பனிக் கடுங்குரையம்; செல்லாதீம்' எனச் |
||
சொல்லினம்ஆயின், செல்வர்கொல்லோ- |
||
ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை |
||
நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ, |
||
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் |
||
மலையுடைக் கானம் நீந்தி, |
||
நிலையாப் பொருட் பிணிப் பிரிந்திசினோரே? | உரை | |
பிரிவு நேர்ந்த தலைமகள், அவனது நீக்கத்துக்கண் வேறுபட்டாளைத் தோழி வற்புறீஇயது. - ஆலந்தூர் கிழார். |
352. பாலை |
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன |
||
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை |
||
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி, |
||
பகல் உறை முது மரம் புலம்பப் போகும் |
||
சிறு புன் மாலை உண்மை |
||
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே. | உரை | |
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார் |
356. பாலை |
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் |
||
கழலோன் காப்பப் கடுகுபு போகி, |
||
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த |
||
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய |
||
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய |
||
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த |
||
பாலும் பல என உண்ணாள், |
||
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே? | உரை | |
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. - கயமனார.் |
363. மருதம் |
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு, |
||
செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும் |
||
மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று, |
||
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் |
||
இன்னா அருஞ் சுரம் இறத்தல் |
||
இனிதோ-பெரும!-இன் துணைப் பிரிந்தே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது. - செல்லூர்க் கொற்றன் |
369. பாலை |
அத்த வாகை அமலை வால் நெற்று, |
||
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக் |
||
கோடை தூக்கும் கானம் |
||
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே. | உரை | |
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயில் கீரத்தனார் |
378. பாலை |
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய, |
||
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய், |
||
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச் |
||
சுடர் வாய் நெடு வேற் காளையொடு |
||
மட மா அரிவை போகிய சுரனே! | உரை | |
மகள் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார் |
380. பாலை |
விசும்பு கண் புதையப் பாஅய், வேந்தர் |
||
வென்று எறி முரசின் நன் பல முழங்கி, |
||
பெயல் ஆனாதே, வானம்; காதலர் |
||
நனி சேய் நாட்டர்; நம் உன்னலரே; |
||
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-ஈங்கைய |
||
வண்ணத் துய்மலர் உதிர |
||
முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே! | உரை | |
பனிப் பருவம் குறித்துப் பிரிந்தான் தலைமகன்; பிரிய, பருவ வரவின்கண் வேறுபடுவாளாயினும், 'கதுமென ஆற்றுவிப்பது அரிது' என்னும் கருத்தினளாய்,கூதிர்ப்பருவத்து, தலைமகள் கேட்பத் தனது ஆற்ற |
383. பாலை |
நீ உடம்படுதலின், யான் தர, வந்து, |
||
குறி நின்றனனே, குன்ற நாடன்; |
||
'இன்றை அளவைச் சென்றைக்க என்றி; |
||
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத் |
||
தீ உறு தளிரின் நடுங்கி, |
||
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே. | உரை | |
உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி, நாணால் வருந்தும் தலைமகளை, நாணுக் கெடச் சொல்லியது. - படுமரத்து மோசி கீரன் |
388. குறிஞ்சி |
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை |
||
கோடை ஒற்றினும் வாடாதாகும்; |
||
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ |
||
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன |
||
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின், |
||
யானை கைம்மடித்து உயவும் |
||
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே. | உரை | |
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார் |
390. பாலை |
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்- |
||
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!- |
||
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென, |
||
வளை அணி நெடு வேல் ஏந்தி, |
||
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே. | உரை | |
புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது. - உறையூர் முதுகொற்றன் |
395. பாலை |
நெஞ்சே நிரை ஒல்லாதே; அவரே, |
||
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்; |
||
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே; |
||
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக் |
||
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்; |
||
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில் |
||
அளிதோதானே நாணே- |
||
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே! | உரை | |
வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, 'நாம் ஆண்டுச் சேறும்' எனத் தோழிக்கு உரைத்தது. |
396. நெய்தல் |
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள், |
||
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே, |
||
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை |
||
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல் |
||
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் |
||
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும் |
||
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே? | உரை | |
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார். |
398. பாலை |
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத் |
||
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை, |
||
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர் |
||
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய |
||
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை, |
||
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு, |
||
மெய்ம் மலி உவகையின் எழுதரு |
||
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே. | உரை | |
பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை ப |