36.
சாங்கித்தாயுரை
|
இதன்கண் : உதயணன்
வாசவதத்தைக்கு யாழ் கற்பித்து வருங் காலத்தே அயல் நாட்டரசர் பலர்
அவ்வாசவதத்தையைத் தாம் தாம் மணந்து கொள்ள விரும்பியவராய்த் தூது விடுதலும்,
இந்நிகழ்ச்சி யறிந்த வாசவதத்தை வருந்துதலும், அதுகண்ட அவள் செவிலியாகிய
சாங்கியத்தாய் என்னுந் தவமூதாட்டி (வாசவதத்தையை) அவளைத் தேற்றுதலும்,
சாங்கியத்தாய் உதயணனைத் தனியிடத்தே காண்டலும், தன் வரலாற்றினை அவனுக்குக்
கூறுதலும் பிறவுங் கூறப்படும். |
|
5 |
மின்னிழை பொருட்டா மேலவன்
கொண்ட துன்னரும் பெரும்பழி நன்னகர்
கழுமக் கம்பலை மூதூர் வம்பலர்
எடுத்த படுசொல் ஒற்றர் கடிதுஅவண்
ஓடி வானுற நிவந்த
வசையின் மாநகர்த் தாம்பெறு செவ்வியுள் தலைமகற்கு உணர்த்தக்
|
உரை
|
|
10
15 |
காமத்து இயற்கை காழ்ப்படல்
உணர்ந்து நகையும் நாணும் தொகஒருங்கு
எய்தி இழிப்புறு நெஞ்சினன் ஆயினும்
யார்கணும் பழிப்புறஞ் சொல்லாப் பண்பினன்
ஆதலின் உருவுவழி நில்லாது ஆயினும்
ஒருவர்க்குத் திருவுவழி நிற்கும் திட்பம் ஆதலின் கேட்டது கரந்து வேட்டது
பெருக்கிப் பட்டது நாணாது பெட்டது மலையும் காலம் அன்மை அல்லது
காணின் கோலம் அன்றோ குமரற்கு
இதுவென எள்ளியும் உரையான் இளமையது
இயல்பென முள்ளெயிறு இலங்கு முறுவலன் ஆகித்
|
உரை |
|
20
25 |
தண்கய மருங்கில் தாமரை
போல அண்ணல்
மூதூர்க்கு அணியெனத்
தோன்றிச் சாமரை இரட்டையும் தமனியக்
குடையும் மாமணி யடைப்பையும் மருப்பியல்
ஊர்தியும் பைந்தொடி ஆயமும் பட்டமும்
உடையோர் ஐம்பதின் ஆயிரர் அரங்கியன்
மகளிருள் மன்னருள்
பிறந்த மக்களுள்
அருங்கலம் தன்னயந்து அரற்றத் தன்கடன்
தர்த்த தகைசால் அரிவைக்குத் தக்கன இவையென
|
உரை |
|
30 |
இசைசால் சிறப்பின் இருங்கலப்
பேழையொடு மணியினும் பொன்னினும் மருப்பினும்
அல்லது மரத்தின்
இயலாத் திருத்தகு
வையம் முத்த மாலை முகமிசை
அணிந்து பொற்றார் புனைந்த புள்ளியல்
பாண்டில் கடைமணை பூட்டிக் கணிகையில் விட்டுப்
|
உரை |
|
35
40 |
பொய்தல் மகளிரொடு புனலாட்டு
அயரினும் தெய்வ
விழவொடு தேர்ப்பின்
இயலினும் நகர்கடந் திறத்த நருமதை
பெறாளென எயின்மூ தாளரை வயின்வயி
னேஎய் வாயில் சுட்டி வளநகந்
அறியக் கோயில் கூத்தும் கொடுங்குழை
ஒழிகெனத் தொன்றியல் அவையத்து நன்றவட்கு
அருளித் தருமணல் பந்தர்த் தான்செயற்கு
ஒத்த கரும மறுத்த கைதூ வமையத்
|
உரை |
|
45 |
திருநிலத்து இறைமை ஏயர்
பெருமகன் பெருங்களிறு அடக்கிய பெறற்கரும்
பேரியாழ் கல்லா
நின்றனள் கனங்குழை
யோளென எல்லா வேந்தரும் மிசையின்
விரும்பி வழிமொழிக் கிளவியொடு வணக்கஞ்
சொல்லிக் கழிபெரு நன்கலம் களிற்றின்மிசை
உயரித் துன்னருங் கோயிலுள் தூதரை விடுத்தர
|
உரை |
|
50
55 |
ஓலையுள் பொருளும்
உரைத்த மாற்றமும் நூலிய லாளரொடு நுண்ணிதின்
கேட்டு நன்றும் என்னான் நன்றென
மறாஅன் மரனிவர் குரங்கின் மகக்கோட்
போல நிலைமையொடு தெரிதரு நீதிய னாகி ஆவது துணிதுணை ஆசையின்
இறீஇத் தார்கெழு வேந்தன் தமர்களை விடுத்தபின்
|
உரை |
|
|
கோமகன் குறித்தது கொண்டுகை
புனைந்து
தாய்மகள் தேரிய தன்வயின் உரைக்க
|
உரை |
|
60
65
70 |
நொதுமல் கிளவி கதுமென வெரீஇப் புதுமரப் பாவை பொறிஅற்
றாங்கு விதுப்புறு நடுக்கமொடு விம்முவனள்
ஆகி இதுமெய் ஆயின் இன்னுயிர்
வேண்டி வாழ்வோர் உளரெனில் சூழ்கதன்
வினையென ஆவி நுண்துகில் யாப்புறுத்
தாயினும் சாவது உறுதியான் தப்பிய
பின்றை என்பின் தீர்க எந்தைதன்
குறையென அன்பிற் கொண்ட அரற்றுறு
கிளவி வளைக்கை நெருக்கி வாய்மிக்கு
எழுதரக் கதிர்முத் தாரம் கழிவன
போலச் சிதர்முத
தாலி சிதறிய
கண்ணள் மாழ்குபு கலிழும் மகள்வயின் தழீஇ
|
உரை |
|
75 |
வீழ்தரு கண்ணீர் விரலின்
நீக்கிக் கவாஅற் கொண்டு காரணம்
காட்டி அழேற்கென் பாவா யதுவு
முண்டோ யாயும் நீயும்
யானும் எல்லாம் இதுமுத லாக இவ்வகை
நிகழின் தலைமகன்
துறந்து தவம்புரி வேமென அஞ்சில் ஓதியை நெஞ்சு
வலியுறீஇச்
|
உரை |
|
80 |
சேயுயர் உலகம் செம்மையில் கூறும் தீதறு நோன்பின் தெய்வந் தேற்றிய
தீம்பால் காட்சித் தெரிவுபல காட்டி மாற்றாக் கவலையின் மனங்கொண் டாங்கு நிறைமை
சான்றநின் நெஞ்சங் கொண்ட பொறைமை காணிய பொய்யுரைத் தேன்என
|
உரை |
|
85
90
95 |
ஓதியும் நுதலும் மாதரை நீவித் தக்கது நோக்கான் பெற்றது
விரும்பி நுந்தை நேரான் நெஞ்சுகொள்
காரணம் பைந்தொடித் தோளி பரிவறக்
கேளென இளமையும் வனப்பும் இல்லொடு வரவும் வளமையும் தறுகணும் வரம்பில்
கல்வியும் தேசத்து அமைதியு மாசில் சூழ்ச்சியொடு எண்வகை நிறைந்த நன்மகன்கு
அல்லது மகள்கொடை
நேரார் மதியோர்
ஆதலின் அவைஒருங்கு உடைமை அவர்வயின்
இன்மையின் அதுபொய் யாதல்
அதனினுந் தேறெனக் காரணக் கிளவி நீர
காட்டிச் செவிலி தெளிப்பக் கவிழ்முகம் எடுத்து
|
உரை |
|
100
105 |
நெடுவெண் தானை வாங்கிக்
கொண்டுதன் வடிவேல் உண்கண் வருபனி
அரக்கித் தோற்ற
நிகர்ப்போர் இன்றி
ஆற்றல் காலனொடு ஒக்கு ஞாலப்
பெரும்புகழ் புகரின்று ஓங்கிய நிகரில்
கேள்வியன் காமம் நுகர்வோர்க்கு ஆரணங்கு
ஆகிய ஏம வெண்குடை ஏயர் மகனொடு வையகம் அறியக் கையகம்
புக்குத் தானறி வீணை தனியிடத்து
எழீஇக் காணும் என்னும் கட்டுரை அன்றியும்
|
உரை |
|
110
115 |
உலக
மாந்தர் உள்ளங்
கொண்ட ஐயக் கிளவி தெய்வம் தேற்றினும் தூயள் என்னாத் தீதுரை எய்தி வாசவ
தத்தையும் வாழ்ந்தனள்
என்னும் ஓசை நிற்றல் உலகத்து
அஞ்சுவன் எமர்தர வாராது ஆயினும்
மிவண்நோற்று அவனுறை உலகத்து அழித்துப்பிறந் தாயினும் எய்துதல் வலித்தனெனு செய்வது
கேளெனத் தெய்வ மாதர் திட்பங் கூற
|
உரை |
|
120 |
அண்ணல் மருங்கின் ஆவது
வேண்டும் தன்மனம் உவந்தது தலைவர
நோக்கி ஏற்ற முன்கைத் தொடிவீழ்ந்து அற்றால் கொற்றொடி
கொண்ட கொள்கையென்
ஏத்தி மிகுதியின் மிக்கதன் மேற்றிணைக்
கேற்பத் தகுவன கூறும் தலைமகன்
மகளென உவகை நெஞ்சமொடு உவப்பன கூறிப்
|
உரை |
|
125
130 |
பைந்தொடி ஆயமொடி பன்னொடி பகர்ந்து கங்குல் யாமத்தங் கண்படுத்
திலையாற் கல்விச் சேவகம் கடவோன் வருந்துணைப் பல்பூங் கோதாய்
பள்ளிகொண்டு அருளெனப் பூமென் சேக்கையுள் புனைஇழைப் புகீஇ யான்வரு
மாத்திரை யாரையும் விலக்கிக் காஞ்சன மாலாய் காவல் போற்றெனத்
|
உரை |
|
135
140 |
தொகுவேன் முற்றஞ் சிவிகையில்
போந்து மயிலாடு
இடைகழி மாடத்து
ஒருசிறைப் பயில்பூங் கொம்பர்ப் பந்தர்முன்
இழிந்து கிளரிழை கற்கும் கேள்விப் பொழுதெனத் தளரியல் ஆயமொடு தாய்முதல்
இசைப்பக் கீத சாலை வேதிகை
காக்கும் கோல்கொள் சுற்றமொடு குமரன்
புகுதர இடுமணல் முற்றத்து இவ்வழி
வருகெனக் கொடிமுதிர் குருகின் கொம்புதலைக்
கொண்ட உதிர்பூம்
புன்கின் ஒருசிறை இரீஇ
|
உரை |
|
145 |
இனைத்திறம் பகருறும் எந்தையொடு
என்னிடைக் கிளைத்திறம் பகருநர் தலைப்பெயல்
அரிதெனக் கண்ணினும் செவியினும் நண்ணுநர்ப்
போற்றி மண்ணகம் காவலன் மாபெருந் தேவி திருவயிற்று இயன்ற பெருவிறல்
பொலிவே இனையை யாவதும் எம்மனோர்
வினையென யாக்கையது இயல்பினும் அன்பினுங்
கொண்டதன் காட்சிக் கண்ணீர் கரந்தகத்து அடக்கி
|
உரை |
|
150 |
இன்னள் என்றியான் என்முதல்
உரைப்பேன் மன்னவன் மகனே மனத்தில்
கொள்ளெனச் செம்மல்
செங்கோல் நுந்தை
அவையத்து என்னிகந்து ஒரீஇயினன் இளமையிற்
கணவன் தன்னிகந் தொரீஇயான் தகேஎன்
ஆகக் கொண்டோன் பிழைத்த தண்டந் தூக்கி
|
உரை |
|
155
160 |
வடிக்கண்
இட்டிகைப் பொடித்துகள் அட்டிக் குற்றம்
கொல்லும்எம் கோப்பிழைப்
பிலன்என முற்றந் தோறும் மூதூர்
அறிய நெய்தல்
புலையன் நெறியில்
சாற்றிப் பைதல் பம்பை இடங்கண் நெருக்கி மணற்குடம் பூட்டி மாநீர்
யமுனை இடைக்கயத்து அழுந்த விடீஇய செல்வுழிப்
|
உரை |
|
165 |
புனல்கரைப் படீஇயர் புதல்வரொடு
ஆர்க்கும் தோணி அரவம் சேணோய்க்
கிசைப்பத் தழூஉப்புணை ஆயமொடு குழூஉத்திரை
மண்டி ஆவி நுண்துகில்
யாப்புறுத்து
அசைத்துப் பாகவெண் மதியில் பதித்த
குடுமிக் களிற்றொடு புக்குக் கயங்கண்
போழ்வோய் அவ்வயின் எழுந்த கவ்வை என்னென
|
உரை |
|
170
175 |
முந்தை உணர்ந்தோர் வந்துநினக்கு உரைப்ப யாமுங் காண்கம் கூமின்
சென்றெனக் கோல்கொண் மள்ளர் கா
லின்டி நம்பி வேஎண்ம் அம்பி வருகென
ஆணையிற் திரீஇயர் அஞ்சன்மின்
நீரெனத் தோணி இழிப்புழித் துடுப்புநனி
நீண்டி நெற்றி
யுற்ற குற்றம் இதுவென
|
உரை |
|
180 |
இதுமுத
லாக இன்னே
இம்மகள் அழிதவப் படுதல் ஆற்றுமென்று
உரைத்த குறிகோள் ஆளன் அறிவிகழ்ந்து
எள்ளி எல்லை ஞாயிறு இரவெழும் எனினும் பல்கதிர்த் திங்கள் பகல்படும்
எனினும்நின் சொல்வரைத்து ஆயின் சொல்லுவை
நீயென இன்னகை முறுவலை ஆகி
இருங்களிற்று நண்நுதல் மத்தகத்து ஊன்றிய கையை
|
உரை |
|
185
190 |
கொண்டோன் கரப்பவும் கொள்கையின்
இகப்போன் தன்குறிப்பு ஆயுழித் தவம்வஇள்கு
எளிதென வம்ப மாக்கள் வாயெடுத்து
உரைத்த வெஞ்சொல் கிளவிநின் அங்கையின்
அவித்து வேண்டியது உரைமி ன்ண்டியான்
ஈருகெனப் புலைமகன் அறையப் பூசலில்
போந்தேன் நிலைமை வேண்டியான் இன்னகர்
வாழ்வேன் தலைமகன்
மகனே தவமென்
துணிவென நிகழ்வதை உரைக்கும் நிமித்திக்கு அஞர்அறப் புகழ்வினை யாகிப் பூக்கொண்டு எறிந்தபின்
|
உரை |
|
195
200 |
மற்றும்
அவனே கற்றது நோக்கி யானை அணிநிழல் படுதலின்
அந்தணி தான்கொண்டு எழுந்த தவத்துறை
நீங்கித் தானை வேந்தன் தாள்நிழல்
தங்கி முற்றிழை மகளிர்க்கு முதுகண்
ஆமெனச் செவ்வகை உணர்ந்தோன் சேனைக்கு
அணிமகன் கோசிகன்
என்றவன் குறிப்பெயர்
கூறி அடையாண் கிளவியொடு அறியக் கூறலும்
|
உரை |
|
205 |
கடிதார் மார்பனும் கலிழ்ச்சி
நோக்கிப் பிறப்பிடை இட்டேன் ஆயினும்
எனக்கோர் சிறப்பினர் ஆதல் தேற்றும்என்
மனன்எனக் கண்டதற் கொண்டு தண்டாது
ஊறுமென் அன்புகரி யாக அறிபுதுணி
கல்லேன் இன்றிவை கரியா இனித்தெளிந்
தனன்என உதயண குமரன் உணர்ந்தமை தேற்றலும்
|
உரை |
|
210
215 |
மறைமூ
தாட்டி மற்றுங் கூறும் கதிர்வினை நுனித்தநின் கணியெனைக்
கூறிய எதிர்வினை எல்லாம் எஞ்சாது
எய்தி இந்நகர்ப் பயின்றுயான் இந்நிலை
எய்திற்று என்னி னாயிற்று என்குவை
ஆயின் என்முதல் கேளெனத் தொன்முதல்
தொடங்கி ஆக்கையின் னிழிந்துநின் அருளில்
பிறந்தஎன் நோக்கரு நல்வினை நுகரிய
செல்கெனக் கொற்றவன் மகனே பற்றாது
விடுவேன் நீராட் டியலணி நின்வயி
னீங்கியப் பேர்யாற்று ஒருகரைப் பெயர்ந்தனென் போகிக்
|
உரை |
|
220 |
கெங்கா தீரத்துத் தேசம்
கெழீஇ அங்காங்கு ஒல்வனென்று ஆத்திரை
முன்னி வம்பலர் மொய்த்ததோர் வழிதலைப்
பட்டு வயிரச் சாத்தொடு வடதிசைப்
போகி அயிரிடு நெடுவழி அரசிடை இருந்துழிப்
|
உரை |
|
225
230 |
பூதியும் மண்ணும்
பொத்தகக் கட்டும் மானுரி மடியும் மந்திரக்
கலப்பையும் கானெடு மணையுங் கட்டுறுத்து
யாத்த கூறை வெள்ளுறிக் குண்டிகைக்
காவினர் தரும தருக்கர் தற்புறஞ்
சூழப் பரிபு மெலிந்த
படிவப் பண்டிதன் சாங்கிய நுனித்தவோர் சாறயர்
முனிவனை ஆங்கெதிர்ப் பட்டாங்கு அவனொடும் போகி
|
உரை |
|
235 |
அத்தவப் பட்டாங்கு அறுவகைச்
சமயமும் கட்டுரை நுனித்த காட்சியேன்
ஆகி இமயப்
பொருப்பகத்து ஈராண்டு
உறைந்தபின் குமரித் தீர்த்தம் மரீஇய
வேட்கையின் அருந்தவ நுனித்த அறவா
சிரியன் தருமவாத் திரையெனத் தக்கணம் போந்துழி
|
உரை |
|
240 |
மாவுஞ் சேனை மதில்புறம்
கவைஇய காள வனத்தோர் கபாலப்
பள்ளியுள் செலவயா உயிர்த்த காலை நூற்றுறை யாற்றுளிக் கிளந்த அறுவகைச்
சமயமும் ஏற்றல் காணுஎம் இறைவன்
தானென மாற்றக் கோடணை மணிமுரசு அறைதலின்
|
உரை |
|
245
250 |
கற்றோர் மொய்த்த
முற்றவை நடுவண் தாழாப் பெரும்புகழ்க் காளக்
கடவுள்முன் பாலகன் என்னும் பண்ணவர்
படிவத்துக் காள சமணன் காட்சி
நிறுப்ப ஐம்பெருஞ் சமயமும் அறந்தோற் றனவென வேந்தவன் நுதலிய வேதஆ
சிரியரும் தாந்தம் மருங்கிற்று ஆழங்
காட்டிச் சாங்கிய சமயம் தாங்கிய
பின்னர் நல்வினை நுனித்தோன் நம்மொடு
வாழ்கெனப் பல்வேல் வேந்தன் பரிவுசெய்து ஒழுகலின்
|
உரை |
|
255
260 |
எழுந்த வாத்திரை ஒழிந்துஈண்டு
உறைவுழிக் கையது வீழினும் கணவன்
அல்லது தெய்வம் அறியாத் தேர்த்துணர்
காட்சிப் படிவக் கற்பின் பலகோ மகளிருள் தொடியோடு அம்மனை தோழி எனத்தன் குடிவழி
யாகக் கொண்ட
கொள்கையின் இத்தவம் உவக்கும் பத்தினி ஆதலின் வஞ்சார் வாகத் தலைப்பெயல்
விரும்பி அறஞ்சார் வாக அன்புசெய்து
அருளி இறைமகன் அறிய இன்துணை யாகிப்
|
உரை |
|
265
270 |
பிறைநுதல்
மாதர் பிறந்த
யாண்டினுள் நாவொடு நவிலா நகைபடு மழலையள் தாய்கைப் பிரிந்துதன் தமர்வயின்
நீங்கி என்கைக் கிவரும் அன்பினள்
ஆதலின் தாயென்று அறிந்தனன் நீயினி
வளர்க்கெனக் காதல்
வலையாக் கைத்தரக்
கொண்டவள் பால்வகை அறிந்தபின் படர்வேன்
தவமென மைத்துன மங்கை மரூஉமா
கண்டு நட்புவலை யாக நங்கையொடு
உறைவேன் ஒன்பதிற்று யாட்டை உதயண கேளெனத்
|
உரை |
|
275
280
285 |
தன்வயின் பட்ட தவ்வியிற் கிளரி அகம்புரி செம்மை அன்பிற்
காட்டி மனமுணக் கிளந்த மந்திரக்
கோட்டியுள் புள்ளும் மாவும் உள்ளுறுத்து
இயன்ற ஆண்பெயர்க் கிழவி நாண்மகிழ்
கடவ வழுக்கிக் கூறினும் வடுவென
நாணி ஒழுக்கம் நுனித்த வூராண் மகளிர் தாநயந்து அரற்றினும் தக்குழி
அல்லது காமுறற்கு
ஒவ்வாக் கயக்கமி
லாளநீ ஒட்டாக் கணிகையைப் பெட்டனை என்பது புலவோர்
தெரியின் பொருத்தமின்
றாகி அலவலை
நீர்த்தால் அத்தைநின் அலரென
|
உரை |
|
290 |
மற்றவள் வினவவும் பற்றியது அவிழான் பண்டறி உண்டெனப் பகைநிலத்து
உறைந்த பெண்டிரைத் தெளிந்து பெருமறை
உரைத்தல் நுண்டுறை யாளர் நூலொழுக்கு அன்றெனத் தேறாத் தெளிவோடு கூறாது
அடக்கி மாயமென்று அஞ்சின் மற்றிது
முடிக்கும் வாயில் இல்லென வலித்தனன்
துணிந்து தாய்முதல் இருந்துதன் நோய்முதல் உரைப்ப
|
உரை |
|
295
300 |
ஒள்ளிழை கணவனும் உரிமையுள்
தெளிந்த கொள்கை அறிந்தியான் கூறவும்
வேண்டா அருமறை அன்மையின் அன்பின்
காட்டி ஒருவயின் ஒண்தொடிக்கு உற்றது
கேளென ஏதின் மன்னர் தூதுவ மாக்கள் வந்தது வடுவெனத் தந்தையோடு
ஊடி அறத்தாறு அன்றியும் ஆகுவ
தாயின் துறத்தல் வேண்டுந் தூய்மை
யோற்கெனத் துணிவுள் ளுறுத்த முனிவினள் ஆகி
|
உரை |
|
305
310 |
நன்மணி யைம்பால் நருமதைக்கு
அரற்றிய மன்ன குமரன்
மனம்பிறிது ஆயினும் எந்தையும் யாயும் இன்னகை
ஆயத்துப் பைந்தொடிச் சுற்றமும் பலபா
ராட்ட மாசில வீணை மடமொழிக்கு
ஈந்தோன் ஆசான் என்னும் சொல்பிறிது
ஆமோ அண்ணல்
குமரற்கு அடிச்செருப்
பாகெனத் தன் மனங் கொண்டவள் தாவ முற்றிச்
|
உரை |
|
315
320 |
சாவினை துணியும் மாத்திரை
யாவதும் மறுவொடு மிடைந்து மாண்பில ஆகிய சிறுசொற் கிளவி கேளல செவியென அங்கையில் புதைஇ யணிநிற
மழுகிய நங்கையைத் தழீஇ நன்னுதல்
நீவி மனங்கொள் காரணம் மருளக்
காட்டி இனமில் ஒருசிறை இன்னினி
தாகப் பூமலி சேக்கையுள் புகுத்தினென்
போந்தேன் பாயலுள ஆயினும் பரிவுஅவள் தீர்கென
|
உரை |
|
325
330 |
இஃதவள் நிலைமை இன்னினிக்
கொண்டு பரிவுமெய்ந் நீங்கிப் பசலையும்
தீர்கென ஒண்ணுதல் மாதர் கண்ஏப்
பெற்ற புண்ணுறு நெஞ்சில் புலம்புகை அகல மாதர் நுதலிய மருந்தியல்
கிளவி ஆருமில் ஒருசிறை அன்புறப்
பயிற்றி நிலைமைக்கு ஒத்த நீதியை
யாகித் தலைமைக் கொத்த வதுவை எண்ணென இழுக்கம் இல்லா இயல்பொடு
புணர்ந்த ஒழுக்கம்
எல்லாம் ஓம்படுத்து உரைஇப்
|
உரை |
|
335
340 |
பூட்டுறு பகழி வாங்கிய
வேட்டுவன் வில்விசை கேட்ட வெரூஉப்பிணை
போலக் காவல் பூட்டியர் நாமிசை
யெடுத்த சொல்லிசை வெரீஇய மெல்லென்
பாவை என்முகத் தேயும்
இறைஞ்சிய தலையள் நின்முகத் தாயின் நிகழ்ந்ததை
நாணி நிலம்புகு வன்ன புலம்பினள்
ஆ£கிச் சிறுமையின் உணர்ந்த பெருமகன்
இரங்க மண்கெழு மடந்தாய் மறைவிடந் தாவென ஒன்றுபுரி கற்பொடு உலகுவிளக்
குறீஇப் பொன்றல் ஆற்றிய புகழாள்
போல கொண்ட கொள்கையின் ஒண்தொடி
யோளும் துளிப்பெயன் மொக்குளின் ஒளித்தல் அஞ்சுவென்
|
உரை |
|
345 |
இன்றைக் கேள்வி இடையிடு
மெனினும் சென்றுஅயா
நங்கையைச் செவ்வி
நோக்கி இன்துணை மகளிரொடு ஒன்றியான்
விடுத்தரும் சொல்லோடு படுத்துச் செல்கவென் களிறென
|
உரை |
|
350 |
அவன்வயின் நீங்கி ஆயங்
கூஉய் மகள்வயின் புக்கு மம்மர்நோய் நீக்கி நல்லோள் கற்கும் நாழிகை இறந்தன வல்லோன் செல்கதன் வளநக
ரத்துஎனக் காஞ்சன மாலாய் காவலற்கு
உரையென மணிப்படு மாடத்து வாயில்
போந்தவள் பணித்த மாற்றம் அணித்தகைக்கு உரைப்ப
|
உரை |
|
355
360 |
ஆர மார்பனும்
போவனன் எழுந்து கற்றிலள் என்னும் கவற்சி
வேண்டா பற்றிய கேள்வியும் முற்றிழை
முற்றினள் குஞ்சர வேற்றும் கொடித்தேர்
வீதியும் பொங்குமயிர்ப் புரவியும் போர்ப்படைப்
புணர்ப்பும் நீதியும்
பிறவும் ஓதிய
எல்லாம் நம்பி குமரரும் தந்துறை முற்றினர்
|
உரை |
|
365
370 |
வல்லவை எல்லாம் வில்லோன்
மக்களை நல்லவை படுப்பது நாளை ஆதலின் என்னறி அளவையின் ஒண்றுதல்
கொண்ட தைவரற்கு
இயைந்த தான்பயில்
வீணையைக் கையினுஞ் செவியினுஞ் செவ்விதின்
போற்றி ஆராய்க என்பது நேரிழைக்
குரையென விசும்பாடு ஊசல் வெள்வளைக்கு இயற்றிய பசும்பொன் ஆகத்துப் பக்கம்
பரந்த நறும்புகை
முற்றத்து நம்பி
நடக்கெனக் குறும்புழை போயினன் கோலவர் தொழவென்.
|
உரை |
|
|