6. சமய இலக்கியம்

அல்லா

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


இப்பாடலின் ஆசிரியர் பெயர் திரு.வி.கலியாணசுந்தரனார். இவருடைய தந்தையார் விருத்தாசலம்.தாயார் சின்னம்மையார். தமிழில் பெரும்புலமை பெற்றவர். அவர் தமிழ் மொழியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அரசியல் உலகம், தொழிலாளர் உலகம், இதழியல் உலகம் எனப் பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டு உழைத்த பெருமகனார். தொழிலாளர் நலன் கருதி தொழிற்சங்கம் அமைத்தவர். தமிழ் உரைநடையின் தந்தை எனச் சான்றோரால் பாராட்டப் பெற்றவர். அவர் பெண்ணின் பெருமை அல்லது திருவள்ளுவர் வாழ்க்கை விளக்கம், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து, பொதுமை வேட்டல் ஆகியப் பல நூல்களைப் படைத்துள்ளார். தமிழ்த்தென்றல் திரு.வி.க. எனப் புகழாரம் சூட்டப்பெற்ற தண்டமிழ்ப் புலவர் இவர். திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்ற பெயரே சுருக்கமாக திரு.வி.க. என்று அழைக்கப் பெறுகின்றது.