6. சமய இலக்கியம்

சிவன்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  தேவாரம் - பொருள் தருக.

தெய்வத்திற்கு அணிவிக்கும் பூமாலை போன்ற பாமாலை.

2.  திருநாவுக்கரசரின் இயற்பெயர் என்ன?

திருநாவுக்கரசரின் இயற்பெயர் மருள்நீக்கியார்.

3.  திருவொற்றியூர் என்பதன் மூலவடிவம் எது?

திருவொற்றியூர் என்பதன் மூலவடிம் திருவொட்டியூர்.

4.  சமய இலக்கியம் என்றால் என்ன?

வழிபாட்டுப் பாடல்களின் வகைமைக்குச் சமய இலக்கியம் என்று பெயர்.

5.  அறிவும், கோபமும் எவ்வாறு உருவகப்படுத்தப் பெற்றுள்ளன?

அறிவு ஊன்றும் துடுப்பாகவும் (கோலாகவும்), கோபம் ஏற்றப்பெறும் பண்டமாகவும் உருவகப்படுத்தப் பெற்றுள்ளன.

6.  வாழ்க்கையாகியக் கடலைக் கடக்க எவை எவை தேவைப்படுகின்றன?

வாழ்க்கையாகியக் கடலைக் கடக்க மனம் எனும் படகும், அறிவு எனும் துடுப்பும் தேவைப்படுகின்றன.

7.  தேவாரம் பாடிய சமயக் குரவர்கள் மூவரைக் குறிப்பிடுக.

தேவாரம் பாடிய சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர் ஆவர்.

8.  ஆணவம் எனும் பாறையில் மோதுவது எது?

ஆணவம் எனும் பாறையில் மோதுவது மனம் எனும் படகாகும்.

9.  இறை உணர்வு எதைத் தரும்?

இறை உணர்வு ஆணவம், காமம், கோபம் ஆகியவற்றை அடக்க கற்றுத் தரும்.

10.  இறை உணர்வு எப்பொழுதிலிருந்து தொடங்க வேண்டும்?

இளமையில் இருந்து இறை உணர்வைத் தொடங்க வேண்டும்.