6. சமய இலக்கியம்

திருமால்

பாட அறிமுகம்
Introduction to Lesson


திருமால்

திருமாலை வணங்கிப் பாசுரங்கள் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர். அவர்கள் வைணவம் வளர்த்த பெருமக்கள் ஆவர். அவர்களின் படைப்புகளை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்ற பெயரில் நாதமுனி என்பவர் தொகுத்தார்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்பதற்கு திருமாலின்மீது பாடப்பெற்ற இனிமையான நான்காயிரம் பாக்களால் ஆன சிற்றிலக்கியம் என்று. பொருள். திருமாலுக்குக் கண்ணன், மாயோன், விட்டுணு, கோவிந்தன் ஆகியப் பெயர்களும் உண்டு. நமக்குப் பாடமாக வந்துள்ள பகுதி குலசேகர ஆழ்வார் பாடியப் பெருமாள் திருமொழியிலிருந்து எடுக்கப்பெற்றப் பாடலாகும்.