இயேசு
பாடல்
Poem
சத்துருவை நேசிக்கும் தன்மை காட்டித்
தனி நிலையாம் இறையருளின் தயவைக் காட்டிச்
சுத்தமிலா அற்பர்களைத் தூர ஓட்டித்
தூய்மையதே இறையென்று துளங்கக் காட்டி
வித்தகமாய்ச் சீடருக்கு விளைவு காட்டி
விண்ணிடத்தும் மண்ணிடத்தும் விழிப்புக்காட்டி
எத்திசையும் இறையருளே காட்டிக் காட்டி
இன்பநிலை எய்திட்ட இயேசு வாழி!
- அ.மு.பரமசிவானந்தம்