6. சமய இலக்கியம்

அல்லா

பாட அறிமுகம்
Introduction to Lesson


நபிகள் நாயகம் வரலாற்றைக் கூறும் நூல் சீறாப்புராணம். அதனை எழுதியவர் உமறுப்புலவர். நமது பாடப்பகுதி இறைத் தூதராம் நபிகள் நாயகத்தை தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் போற்றிப் புகழ்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் இறைவனின் தன்மைகளையும், கொள்கைகளையும் கூறுகின்றார். உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுக் கொள்கைகளை நிலைநாட்டிய பெருமைக்குரிய இறைத்தூதராம் முகம்மது நபியை பலமுறை வணங்குவதாக திரு.வி.க. கூறுகிறார்.