6. சமய இலக்கியம்

இயேசு

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  இயேசு நாதர் வாழ்வைப் பார்த்து ஒருவன் எவ்வாறு வாழவேண்டும்?

இயேசு நாதர் வாழ்வைப் பார்த்து ஒருவன் எல்லாரிடமும் அன்பு செலுத்தி வாழவேண்டும்.

2.  இயேசு நாதரின் வாழ்வைச் சித்திரிக்கும் குறள் எது?

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’.

3.  இயேசு நாதர் விண்ணிலும் மண்ணிலும் என்ன செய்தார்?

இயேசு நாதர் விண்ணிலும் மண்ணிலும் விழிப்புணர்வை உண்டாக்கினார்.

4.  பைபிளில் தேவகுமாரன் எனப்பெறுபவர் யார்?

பைபிளில் தேவகுமாரன் எனப்பெறுபவர் இயேசு நாதர்.

5.  ‘மலைப் பிரசங்கம்’ செய்தவர் யார்?

மலைப் பிரசங்கம் செய்தவர் இயேசு நாதர்.

6.  இயேசு எதனை இறையென்று கூறுகின்றார்?

தூய்மையே இறை என்று இயேசு கூறுகின்றார்.

7.  இயேசு எங்கே பிறந்தார்?

இயேசு பெத்லெகம் என்ற இடத்தில் பிறந்தார்.

8.  எல்லாத் திசையிலும் எது நிறைந்திருப்பதாக இயேசு காட்டுகின்றார்?

எல்லாத் திசையிலும் இறையருள் நிறைந்திருப்பதாக இயேசு காட்டுகின்றார்.

9.  கிறித்துவர்களின் வேதம் எது?

கிறித்துவர்களின் வேதம் பைபிள்.

10.  ‘கவிதை உள்ளம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

‘கவிதை உள்ளம்’ என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்.