6. சமய இலக்கியம்

அல்லா

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  முகமது நபி எந்தப் பகுதியைச் சார்ந்தவர்?

அ) அரேபியா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) ஐரோப்பா

அ) அரேபியா

2.  திரு.வி.க. அவர்களின் தந்தை யார்?

அ) வேதாசலம்

ஆ) அருணாசலம்

இ) சுந்தரம்

ஈ) விருத்தாசலம்

ஈ) விருத்தாசலம்

3.  அரேபியாவில் மக்கள் முதன் முதலில் கடைப்பிடித்த வழிபாடு

அ) பல தெய்வம்

ஆ) ஒரே தெய்வம்

இ) வணக்கமின்மை

ஈ) இயற்கை

அ) பல தெய்வம்

4.  நபிகள் நாயகம் வரலாற்றைக் கூறும் நூல் எது?

அ) சீறாப் புராணம்

ஆ) பழம் புராணம்

இ) இராமாயணம்

ஈ) பெரிய புராணம்

அ) சீறாப்புராணம்

5.  இறைவன் ஒருவனே என்னும் கொள்கையை நிலைநாட்டியவர் யார்?

அ) இயேசு பிரான்

ஆ) முகம்மது நபி

இ) புத்தர்

ஈ) திரு.வி.க.

ஆ) முகம்மது நபி

6.  போற்றி! என்பதன் பொருள் என்ன?

அ) வணங்குகிறேன்

ஆ) வாழ்த்துகிறேன்

இ) பாராட்டுகிறேன்

ஈ) வினவுகிறேன்

அ) வணங்குகிறேன்

7.  ‘தரையினில் பொதுமை மல்க’ என்பதில் தரை எதைக் குறிக்கிறது?

அ) வானம்

ஆ) பாதாளம்

இ) உலகம்

ஈ) தேவலோகம்

இ) உலகம்

8.  ஆண்டவன் என்பது எச் சமயச் சொல்?

அ) வைணவம்

ஆ) கிறித்துவம்

இ) புத்தம்

ஈ) பொதுவாகக் கடவுளைக் குறிக்கும் தமிழ்ச் சொல்

ஈ) பொதுவாகக் கடவுளைக் குறிக்கும் தமிழ்ச் சொல்

9.  ஒருவன் உலக மக்களை எவ்வாறு பார்க்க வேண்டும்?

அ) சகோதரன்

ஆ) சமயவாதி

இ) நண்பன்

ஈ) பக்தன்

அ) சகோதரன்

10.  ‘இளமை விருந்து’ என்ற நூலை இயற்றியவர் யார்?

அ) மறைமலையடிகள்

ஆ) திரு.வி.க.

இ) உமறுப்புலவர்

ஈ) கண்ணதாசன்

ஆ) திரு.வி.க.