6. சமய இலக்கியம்

சிவன்

பாடல் கருத்து
Theme of the Poem


● ஒற்றியூர் உடைய கோவே - திருவொற்றியூரில் எழுந்தருளி இருக்கும் இறைவன் (சிவன்).
● மனமெனும் தோணி பற்றி - மனம் என்னும் படகைத் துணைக் கொண்டு
● மதியெனும் கோலை ஊன்றி - அறிவு என்னும் கோலைப் படகுதள்ளும் கோலாக ஊன்றி.
● சினமெனும் சரக்கை ஏற்றி - கோபம் எனும் பொருளை ஏற்றி
● செறிகடல் செல்லும் போது - வாழ்வாகிய நீர்நிறைந்த கடலில் செல்லும் போது
● மனன் எனும் பாறை தாக்கி - ஆணவம் என்னும் கற்பாறையில் மோதி
● மறியும்போது அறிய ஒண்ணாது - நிலை குலைந்து தவிக்கும் போது, உன்னை வணங்க முடியாது, அதனால்
● உனை எனும் உணர்வை - உன்னை இப்போதே வணங்கும் பக்தியை
● நல்காய் - எனக்கு நீ தரவேண்டும்.

எம்பெருமானே, மனமாகியப் படகில் அறிவாகிய துடுப்புக் கோலை ஊன்றி கோபமாகிய பண்டத்தை ஏற்றிக் கொண்டு வாழ்க்கை என்ற கடலில் விரைந்து செல்லும்போது ஆணவம் என்னும் பாறையில் மோதி, நான் நிலை குலைந்து தவிக்கும்போது உன்னை அறிந்து துதிக்க முடியாது. எனவே, இப்போதே உன்னை நினைத்து வழிபடும் (பக்தி) உணர்வை (அறிவை) எனக்குக் கொடு என்பதாம்.

மனத்தைத் தோணியாகவும், சினத்தைச் சரக்காகவும், மதியைக் கோலாகவும், உலக ஆசையைப் பாறையாகவும் உருவகப்படுத்தி உலக வாழ்க்கையின் இயல்பை உருவக அணியில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நாவுக்கரசர்.