6. சமய இலக்கியம்

இயேசு

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

உலகில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப் பெறுவது கிறித்துவ சமயமாகும். இது இயேசு நாதர் என்ற தேவ தூதரால் தோற்றுவிக்கப் பெற்றது. இவர் பெத்லெகம் என்ற இடத்தில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று கூறப்படுகின்றது. இயேசுவின் பெற்றோர் சூசையப்பர், மேரி ஆவர். இவரின் கொள்கைக் கோட்பாடுகளைச் சொல்லுவது பைபிள். இதனைத் தமிழில் விவிலியம் என்பர். மனிதன் அன்பின் வடிவமாக, தியாகத்தின் திருவுருவமாக வாழவேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்டது கிறித்துவ சமயம். பொதுவாக எல்லாச் சமயங்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்காக எழுந்தவைதான். மக்கள் மனங்களைப் பண்படுத்தவே முதலில் சமயங்கள் தோன்றின என்பதற்கு ஏசுநாதரின் மலைப் பிரசங்கம் ஓர் எடுத்துக்காட்டு எனலாம். தமிழ்நாட்டிலும் இச்சமயம் பரவியது. அதன் மூலம் தமிழருக்கும், தமிழுக்கும் வீரமா முனிவர் போன்ற பெரும் புலவர்கள் கிடைத்தார்கள். புலவர்கள் பலர் கிறித்துவின் அறவுரைகளைப் பாட்டாக எழுதினார்கள். அவ்வாறு எழுதப்பெற்ற பாடல்களில் உங்களுக்கு ஒன்று வழிபாட்டுப் பாடலாக அமைந்து உள்ளது.