அல்லா
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. திரு.வி.க. என்பது ------------- என்பதன் சுருக்கமாகும்.
திரு.வி.க. என்பது திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்பதன் சுருக்கமாகும். .
2. முகமது நபி ------------- மரபினை இவ்வுலகில் பரப்பினார்.
முகமது நபி கடவுள் ஒருவரே என்னும் மரபினை இவ்வுலகில் பரப்பினார்.
3. திரு.வி.க. எழுதிய நூல்களில் ஒன்று ----------.
திரு.வி.க. எழுதிய நூல்களில் ஒன்று பெண்ணின் பெருமை.
4. இறைவன் முன் எல்லாருமே ------------- ஆவர்.
இறைவன் முன் எல்லாருமே சகோதரர்கள் ஆவர்
5. இசுலாம் ----------- சமயங்களுள் ஒன்று.
இசுலாம் உலகப் பெரும் சமயங்களுள் ஒன்று.
6. இறைவன் நபிகட்கு அருளிய மறை ---------.
இறைவன் நபிகட்கு அருளிய மறை குரான்.
7. தொழிலாளர் நலங்கருதி ----------- அமைத்தவர் திரு.வி.க.
தொழிலாளர் நலங்கருதி சங்கம் அமைத்தவர் திரு.வி.க.
8. தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்பெறுபவர்----------.
தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்பெறுபவர் திரு.வி.க.
9. மக்களிடையே --------- பெருக நபிகள் பாடுபட்டார்.
மக்களிடையே சகோதரத்துவம் பெருக நபிகள் பாடுபட்டார்.
10. உலகில் இறைவன் என்பவன் --------------.
உலகில் இறைவன் என்பவன் ஒருவனே.