இயேசு
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. இயேசு நாதர் --------- தூதர்.
இயேசு நாதர் தேவ தூதர்.
2. கிறித்துவர்களின் புனித நூல் ---------.
கிறித்துவர்களின் புனித நூல் பைபிள்.
3. பைபிளைத் தமிழில் ----------- என்று சொல்லுவார்கள்.
பைபிளைத் தமிழில் விவிலியம் என்று சொல்லுவார்கள்.
4. இயேசு நாதர் ---------- தொழுவத்தில் பிறந்தார்.
இயேசு நாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்
5. இயேசுவின் தாயார் பெயர் ----------- என்பதாகும்.
இயேசுவின் தாயார் பெயர் மேரி என்பதாகும்
6. இயேசு பிறந்த இடம் --------------.
இயேசு பிறந்த இடம் பெத்லெகம்
7. எல்லாத் திசைகளிலும் இறைவனின் ----------- பரப்பியவர் இயேசு.
எல்லாத் திசைகளிலும் இறைவனின் திருவருளை பரப்பியவர் இயேசு.
8. இயேசுவின் பிறந்த நாள் ----------- ஆகக் கொண்டாடப்பெறுகிறது
இயேசுவின் பிறந்த நாள் கிறித்துமசு ஆகக் கொண்டாடப்பெறுகிறது
9. இயேசுவின் ----------- பிரசங்கம் மிகுந்த சிறப்புப் பெற்றது.
இயேசுவின் மலைப் பிரசங்கம் மிகுந்த சிறப்புப் பெற்றது.
10. விண்ணுலகையும் மண்ணுலகையும் விழிப்புறச் செய்த ---------- ஒளி இயேசு நாதர்.
விண்ணுலகையும் மண்ணுலகையும் விழிப்புறச் செய்த அறிவு ஒளி இயேசு நாதர்.