6. சமய இலக்கியம்

சிவன்

பாடல்
Poem


சிவன்

மனமெனும் தோணி பற்றி

மதியெனும் கோலை ஊன்றிச்

சினமெனும் சரக்கை ஏற்றிச்

செறிகடல் ஓடும் போது

மனனெனும் பாறை தாக்கி

மறியும்போ தறிய ஒண்ணா

உனையுனும் உணர்வை நல்காய்

ஒற்றியூர் உடைய கோவே.

- திருநாவுக்கரசர்