அல்லா
பாடல் கருத்து
Theme of the Poem
அரேபிய நாட்டில் பிறந்து, இவ்வுலகில் கடவுள் ஒருவரே என்னும் கொள்கையை நிலைநாட்டி அருளிய முகம்மது நபி அவர்களே! உம்மை வணங்குகின்றேன். இவ்வுலகில் பிறந்த எல்லாரும் சமமானவர்களே என்னும் பொதுக்கொள்கை பெருகி வளரும்படியும், மக்களிடையே சகோதரத்துவம் உயர்ந்து சிறக்கவும், குற்றம் இல்லாத குரானைத் தந்த கருணை மிக்கவரே!உம்மைப் பலமுறை வாழ்த்தி வணங்குகின்றேன்.