திருமால்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகர ஆழ்வார் பாடியப் பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்பெறும். குலசேகர ஆழ்வார் சேரநாட்டின் சிறப்பு வாய்ந்த மன்னராய் இருந்தவர். முடிசூடி அரசாள்வதைவிட திருமாலின் அடிசூடி வாழ்வதே மேல் என வாழ்ந்தவர். வைணவ உலகு இவரை மிக உயர்த்திப் போற்றுகின்றது. இவரின் காலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்பர்.