6. சமய இலக்கியம்

அல்லா

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

உலகில் தோன்றிய சமயங்களில் பெரும்பான்மையான மக்களால் தழுவப்பெறுவன யூத சமயம், கிறித்துவம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம், சீக்கியம், இசுலாம் முதலானவை ஆகும். பொதுவாக, சமயங்களின் நோக்கம் மக்களை நன்னெறிப் படுத்துதல் ஆகும்.

முகம்மது நபியினால் தோற்றுவிக்கப்பெற்றது இசுலாம் சமயமாகும். இது, அரேபியாவில் பல கடவுளர்கொள்கை வழிபாட்டில் மக்கள் துன்புற்றபோது இறைவன் ஒருவனே; அவன் அல்லா எனக் கூறவந்த சமயமாகத் தோன்றியது.