இயேசு
பாடல் கருத்து
Theme of the Poem
இயேசு பகைவரையும் நேசிக்கும் தன்மையை உலகிற்கு உணர்த்தினார். ஒப்பற்ற நிலை பெற்ற இறையருளாகிய தயவை விளக்கிக் காட்டினார். தூய்மை இல்லாத தீயவர்களைத் தூர விலக்கித் தூய்மையே கடவுள் என்பதை விளக்கிக் காட்டினார். தம் மாணவர்கட்கு ஒளியாய்த் தோன்றி விண்ணுலகையும் மண்ணுலகையும் விழிப்புறச் செய்தார். எல்லாத் திசைகளிலும் இறைவன் திருவருளை விளங்கச் செய்தார். இன்ப நிலை அடைந்த இயேசு வாழ்க!