6. சமய இலக்கியம்

அல்லா

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  திரு.வி.க. என்பதை விரித்து எழுதுக.

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரம் என்பதே திரு.வி.க. என்பதன் விரிவாகும்.

2.  முகம்மது நபியின் முக்கிய நெறி யாது?

இறைவன் ஒருவனே! எல்லாரும் சமமானவர் என்பது முகம்மது நபியின் தலையாய நெறியாகும்.

3.  பல தெய்வங்கள் கொண்டதால் ஏற்பட்ட தீமையைக் கூறுக.

பல தெய்வங்கள் கொண்டதால் அவரவர் தெய்வத்தின் பெயரால் சண்டைகள் தோன்றின.

4.  உமறுப்புலவர் இயற்றிய நூலின் பெயர் என்ன?

உமறுப்புலவர் இயற்றிய நூலின் பெயர் சீறாப்புராணம்.

5.  உமறுப்புலவர் இயற்றிய நூலின் பெயர் சீறாப்புராணம்.

மக்களிடம் நிலவிய பலகடவுளர் கொள்கையால் ஏற்பட்ட அமைதியற்ற நிலையைப் போக்கவே இசுலாம் தோன்றியது.

6.  திரு.வி.க. எழுதிய நூல்களில் மூன்றனை எழுதுக.

முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, இளமை விருந்து ஆகியவை திரு.வி.க. எழுதிய நூல்களாகும்.

7.  உலகச் சமயங்கள் மூன்றனை எழுதுக.

கிறித்துவம், பௌத்தம், இசுலாம் ஆகியன மூன்று உலகச் சமயங்களாகும்.

8.  தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்பெறுபவர் யார்?

தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்பெறுபவர் திரு.வி.க.

9.  திரு.வி.க. என்ன சங்கம் அமைத்தார்?

திரு.வி.க. தொழிலாளர் நலன் கருதி தொழிற்சங்கம் அமைத்தார்.

10.  இசுலாமியரின் மறை நூல் எது?

குரான் என்பது இசுலாமியரின் மறை நூலாகும்.