திருமால்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
திருமாலை வணங்குபவர்கள் வைணவர்கள் ஆவர். திருமாலை வணங்கிப் பிறவி வேண்டாம் என்று வேண்டுவது இயற்கை. ஆனால், இந்த இயற்கைக்கு மாறாக குலசேகர ஆழ்வார் தாம் மீண்டும் திருவேங்கடத்தில் பல உருவங்களில் பிறவி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். நமக்குக் கொடுக்கப் பெற்றுள்ள பாடலில் மீனாகப் பிறக்க அருள்புரிய வேண்டும் என்கின்றார்.