6. சமய இலக்கியம்

சிவன்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  திருநாவுக்கரசர் ---------- நாட்டின் -------------ஊரைச் சார்ந்தவர்.

திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டின். திருவாமூர் ஊரைச் சார்ந்தவர்.

2.  திருநாவுக்கரசர் தந்தை பெயர் ---------, தாய் ----------

திருநாவுக்கரசர் தந்தை பெயர் புகழனார் தாய் மாதினியார்

3.  ஒற்றியூர் என்பது ------------- என்பதன் திரிபாகும்.

ஒற்றியூர் என்பது திருவொட்டியூர் என்பதன் திரிபாகும்.

4.  திருநாவுக்கரசரின் புனைப் பெயர் --------------.

திருநாவுக்கரசரின் புனைப் பெயர் அப்பர்.

5.  நாவுக்கரசரின் தமக்கையின் பெயர் ----------.

நாவுக்கரசரின் தமக்கையின் பெயர் திலகவதியார்

6.  தேவாரம் ---------- திருமுறைகளில் ஒன்று.

தேவாரம் பன்னிரண்டு திருமுறைகளில் ஒன்று.

7.  ஆரம் என்பது ------------ யைக் குறிக்கும்.

ஆரம் என்பது மாலை யைக் குறிக்கும்.

8.  மனம் எனும் படகைச் செலுத்துவது --------- எனும் துடுப்பு ஆகும்.

மனம் எனும் படகைச் செலுத்துவது அறிவு எனும் துடுப்பு ஆகும்.

9.  வாழ்க்கைக் கடலில் மோதுவது --------- எனும் பாறையால்.

வாழ்க்கைக் கடலில் மோதுவது ஆணவம் எனும் பாறையால்.

10.  திருநாவுக்கரசர் காலம் ---------- நூற்றாண்டு.

திருநாவுக்கரசர் காலம் ஏழாம் நூற்றாண்டு.