சிவன்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
சிவன், முருகன் ஆகிய கடவுளர்களை வணங்குபவர்கள் சைவர்கள் என்று அழைக்கப்பெறுகின்றனர். சிவன் முழுமுதற் கடவுள் ஆவார். ‘அன்பே சிவம்’ என்றும், ‘தென்னாடுடைய சிவனே போற்றி - எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்றும் போற்றப்பெறும் தமிழர்களின் ஆதி கடவுள் சிவன் என்பர்.