சிவன்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
நம் பாடப் பகுதியின் பாடல் ஆசிரியர் திருநாவுக்கரசர் ஆவார். இவருக்கு அப்பர், மருள் நீக்கியார், வாகீசர் என்று வேறு பெயர்களும் உள்ளன. இவர் திருமுனைப்பாடி நாட்டைச் சார்ந்த திருவாமூரில் பிறந்தவர். இயற்பெயர் மருள்நீக்கியார். இவர் பெற்றோர் புகழனார், மாதினியார் ஆவர். தமக்கையார் திலகவதியார். இவர் முதலில் சமண சமயத்தினராக விளங்கினார். இதைக் கண்டு திலகவதியார் வருந்தினார். திலகவதியாரின் வேண்டுகோளைக் கேட்ட இறைவன், திருநாவுக்கரசருக்கு சூலை நோய் என்னும் தீராத வயிற்று வலியால் வருந்தச் செய்தார். திலகவதியார் திருநாவுக்கரசரின் தீராத வயிற்றுவலியினை சிவன் அருளால் தீர்த்தார். எனவே, இவர் சைவ சமயத்தில் சேர்ந்தார். இறைவனைக் குறித்து இன்னிசைப் பாடல்கள் பாடினார். இறைவன் இவரை நாவுக்கரசர் என்று பாராட்டினார். இவர் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.