6. சமய இலக்கியம்

திருமால்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  குலசேகர ஆழ்வார் எந்நாட்டு மன்னராக இருந்தார்?

அ) சோழ நாடு

ஆ) பாண்டிய நாடு

இ) சேர நாடு

ஈ) ஒளி நாடு

இ) சேர நாடு

2.  வைணவ ஆழ்வார்கள்

அ) பதின்மர்

ஆ) பன்னிருவர்

இ) நால்வர்

ஈ) எண்மர்

ஆ) பன்னிருவர்

3.  ‘பிரபந்தம்’ என்பதன் பொருள் என்ன?

அ) காப்பியம்

ஆ) இலக்கியம்

இ) சிற்றிலக்கியம்

ஈ) பெருங்காப்பியம்

இ) சிற்றிலக்கியம்

4.  பெருமாள் திருமொழி பாடியவர் யார்?

அ) நம்மாழ்வார்

ஆ) திருமங்கையாழ்வார்

இ) ஆண்டாள்

ஈ) குலசேகர ஆழ்வார்

ஈ) குலசேகர ஆழ்வார்

5.  திருவேங்கடமலையில் எதுவாக பிறக்க குலசேகர ஆழ்வார் விரும்புகிறார்?

அ) நாரை

ஆ) சங்கு

இ) செண்பகப் பூ

ஈ) மீன்

ஈ) மீன்

6.  திருவேங்கட மலைச் சோலைகளில் உள்ளவை எவை?

அ) தேன் மலர்கள்

ஆ) மீன்கள்

இ) சுனைகள்

ஈ) நாரைகள்

அ) தேன் மலர்கள்

7.  அரம்பையர் என்போர்

அ) ஆடல் மகளிர்

ஆ) அழகிய மகளிர்

இ) அரவாணிகள்

ஈ) மூன்று தேவியர்

ஆ) அழகிய மகளிர்

8.  நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர்

அ) கம்பர்

ஆ) சயங்கொண்டார்

இ) நாதமுனி

ஈ) ஒட்டக்கூத்தர்

இ) நாதமுனி

9.  பிறவி வேண்டும் என்று பாடிய வைணவ ஆழ்வார்

அ) பொய்கையாழ்வார்

ஆ) திருமங்கையாழ்வார்

இ) பொடியாழ்வார்

ஈ) குலசேகர ஆழ்வார்

ஈ) குலசேகர ஆழ்வார்

10.  விண்ணுலகின் அழகிய மகளிர்

அ) நால்வர்

ஆ) மூவர்

இ) ஐவர்

ஈ) இருவர்

ஆ) மூவர்