அருஞ்சொற் பொருள் - அகரவரிசை

கடநாகம் ... யானை 175
கடம் ... காடு 160, 269
கடம் ... மதநீர் 180
கடமலை ... யானை 174
கடாவுதல் ... செலுத்துதல் 267
கடி ... மணம் 155, 167, 178, 181, 228, 244, 269
கடி ... காவல் 177
கடிதல் ... நீக்குதல் 85
கடுக்கை ... கொன்றை 140, 178
கடுத்தல் ... ஒத்தல் 64, 301
கண்டம் ... கழுத்து 118, 149
கண்டல் ... கழிமுள்ளி 249
கண்ணீர் ... மதுவாகிய நீர் 140
கதம் ... சினம் 65
கதழ்தல் ... விரைதல் 56
கதுப்பு ... கூந்தல் 134, 242, 247, 299
கபாய் ... போர்வை 177
கம்பலை ... ஆரவாரம் 56
கயந்தலை ... யானைக்கன்று 77
கயில் ... ஆபரணக் கடைப்புணர்வு 170
கரடம் ... மத நீர் 119
கராம் ... முதலை விசேடம் 164
கரி ... சான்று 197
கருந்தாது ... இரும்பு 118
கலங்கஞர் ... வருந்துதற்குக் காரணமான துயர் 78, 203
கலம் ... அணி 78
கலவர்   மரக்கலம் ஓட்டுநர் 110
கலித்தல்   செருக்குதல் 148
கலித்தல்   செழித்தல் 300
கலுழ்தல்   கண்கலங்கியழுதல் 127
கலுழி ... அருவி 273
கலை ... ஆண்மான் 77
கவலை ... அருவழி 225
கவற்றுதல் ... கவலையுறுவித்தல் 86
கவிகண்ணனார் ... விநாயகர் 276
கவுந்தி ... குந்திதேவி 265
கவைஇ ... அகத்திட்டு 225
கழாஅல் ... கழுவுதல் 265
கழை ... மூங்கில் 179
கள்வன் ... நண்டு 134
கறித்தல் ... கடித்தல் 87
கறை ... கறுப்பு மறு 129, 179
கனம் ... மேகம் 149
கன்றுதல் ... மிகவும் செய்தல் 116
கா ... கற்பகச் சோலை 172
காதி ... கன்ம விசேடம் 154
காந்தட்டு ... காந்தள் பூக்களை உடையது 77
காற்புலி ... வியாக்ரபாத முனிவன் 115
கீளுதல் ... கிழித்தல் 109
குக்கில் ... செம்போத்து 279
குஞ்சி ... ஆடவர் தலைமயிர் முடி 72
குட்டம் ... ஆழம் 110
குணில் ... குறுந்தடி 144
குமைத்தல் ... அழித்தல் 119
குயம் ... நகில் 296
குயின் ... மேகம் 179
குரம்பை ... குடில் 183
குரல் ... கதிர் 134, 228
குரவை ... கைகோத்தாடும் கூத்து 129
குரு ... நிறம் 145
குரூஉ ... நிறம் 163, 167
குவவு ... திரட்சி 249
குழிசி ... பானை (உணவு) 257
குளவி ... காட்டு மல்லிகை 195, 241, 247
குளிரி ... குளிர்ப்புச் செய்யும் பொருள் 178
குறும்பு ... பாலை நிலத்தூர் 146
குனிப்பு ... வளைவு 178
கூடார் ... பகைவர் 126
கூழை ... கூந்தல் 279
கூளி ... பேய் 198
கேளிர் ... உறவினர் 217
கேள் ... தலைவன் 195, 229
கேள்வன் ... கணவன் 117, 228
கொடிச்சி ... குறத்தி 95
கொடிஞ்சி ... தேர்த்தட்டு 86
கொடிறு ... கவுள் 119
கொடுவரி ... புலி 163, 175
கொட்பு ... சுழற்சி 164
கொண்கன் ... தலைவன் 284
கொண்டல் ... நீருண்ட மேகம் 128, 129, 164
கொண்மூ ... நீருண்ட மேகம் 65, 140, 154, 234
கொன் ... அச்சம் 134
கொன் ... பெருமை 172, 207
கோடரம் ... குரங்கு விசேடம் 87
கோமாரி ... என்றும் இளையவள் 179
கோழி ... உறையூர் 55
கோழிலை ... கொழுகொழுப்பான இலை 179
கைதை ... தாழை 197